• Download mobile app
15 Aug 2025, FridayEdition - 3474
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாஸ்மாக் கடை ஊழியரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பி சென்ற மூன்று பேர் கைது

November 29, 2021 தண்டோரா குழு

கோவை இடிகரை பகுதியில் கடந்த நவம்பர் 13ம் தேதி அங்குள்ள டாஸ்மாக் கடை ஊழியர் சிதம்பரம் வீடு திரும்பும் போது மர்ம நபர்கள் வழிமறைத்து அரிவாளால் சரமாரியாக தாக்கி அவரிடமிருந்து செல்போன் மற்றும் இரு சக்கர வாகனத்தை மர்ம கைப்பற்றி சென்றனர்.

படுகாயமடைந்த சிதம்பரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இசக்கிமுத்து(21), இசக்கி பாண்டி(23), வான்பாண்டி(20) ஆகியோரை கைது செய்துள்ளனர்.

விசாரணையில் மூவரும் திட்டமிட்டு இந்த வழிப்பறியில் ஈடுப்பட்டதும் பணம் தர மறுத்ததால் சிதம்பரத்தை தாக்கி விட்டு வாகனம் செல்போனை பறித்து தப்பியதும் தெரியவந்தது. இவர்களிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இவர்கள் மூவர் மீதும் ஏற்கனவே திருநெல்வேலி, தூத்துக்குடி, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வழிப்பறி, திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க