• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாஸ்க் மூலம் இழந்த ரூ.10 லட்சத்தை மீட்க வங்கியில் உள்ள ரூ.43 லட்சத்தை முடக்கி போலீஸார் அதிரடி

June 1, 2023 தண்டோரா குழு

கோவை அரசூர் பகுதியை சேர்ந்தவர் சிங்காரம். இவர் பகுதி நேர வேலைக்காக ஆன்லைன் மூலம் தேடியதில் டெலிகிராம் ஐடி மூலமாக வந்த ஒரு லிங்கினுள் சென்று சிறிய டாஸ்க்குகள் செய்து கொடுத்து அதன் மூலம் சிறுதொகையை முதலீடாக பெற்றுள்ளார். இதனை உண்மை என நம்பியவர் மேலும் முதலீடு செய்து டாஸ்கில் செலுத்துவதற்காக 13 பரிவர்த்தனைகள் மூலம் ரூ.10,90,690 பணம் செலுத்தி அதிக வருமானம் பெறலாம் என்று நம்பி பணம் செலுத்தியுள்ளார்.

பின்னர் தான் தவறான வழிகாட்டுதலில் சென்று மோசடி அடைந்ததை உணர்ந்து சிங்காரம் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் தொடர்புடைய வங்கி கணக்குகளில் இருந்த ரூ.43,99,711 முடக்கம் செய்யப்பட்டுள்ளது. சிங்காரத்தின் பணம் ரூ.10,90,690 மீட்கவும் தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில்,

“பொதுமக்கள் ஆன்லைனில் குறைந்த பணத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என செய்திகளில் வரும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். இணையதளத்தில் உங்களது பணத்தை இழந்து விட்டால் 1930 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளவும். சைபர் கிரைம் புகார்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்தால் கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் உங்களை தொடர்பு கொண்டு நீங்கள் இழந்த பணத்தை மீட்டுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்றார்.

மேலும் படிக்க