• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

” டாய் கெத்தான் 2021″ இறுதி போட்டி ; கோவை மாணவனுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி !

June 24, 2021 தண்டோரா குழு

அகில இந்திய அளவில் மத்திய அரசு நடத்திய ” டாய் கெத்தான் 2021″ போட்டியின் இறுதி போட்டி நடைபெறுவதையடுத்து கோவையில் கல்லூரி மாணவனுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

இந்தியாவில் விளையாட்டு பொம்மை சந்தை 1.5 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ள நிலையில் பெரும்பாலும் இறக்குமதி சந்தையின் ஆதிக்கத்திலேயே உள்ளது.இந்த பொம்மைகளில் பெரும்பாலானவை இந்திய பாரம்பரியம், நாகரிகம் மற்றும் மதிப்பு அமைப்புகளை பிரதிநிதித்துவப் படுத்துவதில்லை என்பதால், பொம்மை இறக்குமதியை குறைக்கவும், இந்திய நாட்டின் நாகரிகம், வரலாறு, கலாச்சாரம், புராணங்கள் அடிப்படையில் பொழுதுபோக்கு அம்சங்களை உருவாக்கவும் ‘ஆத்மநிர்பர்பாரத் அபியான்’ என்ற திட்டம் மத்திய அரசால் அண்மையில் தொடங்கப்பட்டது.

அதன்படி, நாட்டின் கலாச்சாரங்களை கருத்தில்கொண்டு விளையாட்டு பொம்மைகள், வீடியோ கேம்கள், விளையாட்டு கருத்துகளை உருவாக்க மத்திய கல்வி அமைச்சகம் உட்பட பல்வேறு அமைச்சகங்கள் இணைந்து ‘டாய் கேத்தான்-2021’ என்ற பெயரில் போட்டியை ஏற்பாடு செய்து நடத்துகிறது. கடந்த பிப்ரவரி 27-ம் தேதி முதல் இந்த போட்டி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள, 86 கல்லுாரியில் நடந்து வந்தது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், ஸ்டார்ட்-அப்கள், பொம்மை வல்லுநர்கள், தொழில் வல்லுநர்கள் உள்ளிட்டோர் தங்களது புதுமையான பொம்மைகள் மற்றும் விளையாட்டு கருத்துகளை சமர்ப்பிக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதில் வெற்றி பெறும் நபர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசுடன் சிறந்த பொம்மைகள் மற்றும் விளையாட்டு கருத்துகள் ‘டாய் கேத்தா’னின் தேசிய பொம்மை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இறுதி சுற்று கடந்த 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில், இன்று முடிவடைவதை அடுத்து, இந்த போட்டியில் பங்கேற்ற மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

இணைய வழியாக நடந்த இந்த போட்டியில் சிறப்பான கருத்தை படைத்த 6 மையங்களை சேர்ந்த மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். தமிழகத்தில் சென்னை, கோவை ஆகிய மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் 2 மாணவர்களுடன் பிரதமர் பேசினார். அதில், கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் சேலத்தை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் ஆத்திக் முஹம்மதுடன் பேசிய பிரதமர் மோடி, அவரது படைப்பை பாராட்டியதுடன் சில ஆலோசனைகளையும் வழங்கினார். மாணவனின் இந்த கண்டுபிடிப்பு, தொழிற்துறையினர் விரும்பினால் தங்களது வர்த்தக பயன்பாட்டிற்கு உபயோகிக்கும் வழிவகையுள்ளது .

மேலும் படிக்க