• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாய்லெட் பேப்பரில் ஒபாமா படம், சர்ச்சை உணவகம்.

April 29, 2016 தண்டோரா குழு

ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவிலிருந்து 4000 மைல்கள் தொலைவில் இருக்கும் ஊர் கரஸ்னொயார்க்ஸ்.

இந்த நகரத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கவுரவிக்கும் வகையில் ‘பிரசிடெண்ட் பேக்’ என்ற உணவு விடுதி என்று சமீபத்தில் திறக்கப்பட்டது.

அந்த விடுதியில் புதினின் சாதனைகளை விளக்கும் வகையில், அவரின் குழந்தை பருவம் முதல் ஜனாதிபதி ஆன வரை நிகழ்ச்சிகள் அடங்கிய புகைப்படங்களில் தொகுப்புகள் வைக்கப்பட்டிருந்தது.

அதுமட்டுமின்றி இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மற்றும் ஜெர்மனி பிரதமர் ஆகிய தலைவர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தது.

ஆனால் அந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் முகம் கிழிக்கப்பட்டு இருந்தது.

அதோடு, விடுதியின் கழிவறையில் ஜெர்மன் அதிபர் அஞ்செலா மெர்கெல் படம் வைக்கப்பட்டிருந்தது. அதையும் வாடிக்கையாளர்கள் பூனை போல முகம் முழுவதும் முடி வரையப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி கழிவறையில் நுழைந்தவுடன் கீழே தரையில் விரிக்கப்பட்டிருந்த தரை விரிப்பில் அமெரிக்க தேசிய கொடி இருந்தது.

அதற்கும் ஒரு படி மேலே போய், கழிவறையில் உள்ள டாய்லெட் பேப்பரில், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் புகைப்படம் அச்சடிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரங்கள், தற்போது இருநாடுகளுக்கும் இடையே உள்ள விரிசலை மேலும் அதிகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க