• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டான்ஸ்சியா மண்டல துணை தலைவராக கோவை தொழில் முனைவோர் தேர்வு

September 27, 2021 தண்டோரா குழு

தமிழகத்தில் உள்ள சிறு, குறு தொழில் சார்ந்த நிறுவனங்களின் தலைமை அமைப்பாக தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் நிலவி வருகிறது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இச்சங்கத்தில் மாநிலத்தில் உள்ள 139 தொழில் அமைப்புகள் உறுப்பினர்களாக உள்ளன.

இச்சங்கத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி என 4 மண்டலங்களாக பிரித்து நடைபெற்ற தேர்தலில், கோவை மண்டல துணை தலைவராக கோவையை சேர்ந்த ரயில்வே பொருட்கள் உற்பத்தியாளர் சங்க தலைவர் சுருளிவேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து எஸ்.சுருளிவேல் கூறுகையில்,

‘சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான வாரியம் உள்ளிட்டவற்றில் டான்ஸ்சியா உறுப்பினராக உள்ளது. மத்திய, மாநில அரசுகளை சந்திக்க முக்கிய பிரதிநிதித்துவம் கிடைக்கும். இதனால் மாவட்ட ரீதியாக குறு, சிறு நிறுவனங்களின் தேவைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அரசுகளின் கவனத்துக்கு நேரடியாக கொண்டு செல்லும் வாய்ப்பு உள்ளது, ‘என்றார்.

மேலும் படிக்க