• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாடா க்ரூசிபிள் விநாடி – வினா போட்டி கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி சரத்சந்தர் வெற்றி

March 16, 2021 தண்டோரா குழு

டாடா க்ரூசிபிள் கேம்பஸ் விநாடி – வினா போட்டிக்கான க்ளஸ்டர் 6 இறுதிப்போட்டியில் கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியைச் சேர்ந்த சரத்சந்தர் எம் வெற்றி பெற்றுள்ளார்.

கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர் க்ளஸ்டர் 6 இறுதிப்போட்டியில் பங்கேற்றனர்.விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்களது கூர்மையான அறிவுத்திறனையும், உடனுக்குடன் அவற்றை வெளிப்படுத்தும் இயல்பையும் பெற்றிருந்தனர்.

வெற்றி பெற்ற சரத்சந்தர் ரூ.35,000 ரொக்கப்பரிசு பெற்றார்; அது மட்டுமல்லாமல், தேசிய அளவிலான இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவதற்காக நடத்தப்படும் மண்டல அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்கவுள்ளார். வேலூரில் உள்ள வேலூர் இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியை சேர்ந்த ஷிவான்ஷ் மிஸ்ரா இரண்டாமிடம் பிடித்து ரூ.18,000 ரொக்கப்பரிசை பெற்றார். மெய்நிகர் முறையில் நடத்தப்பட்ட பரிசளிப்பு விழாவில், டைட்டன் கம்பெனி லிமிடெட்டின் ஓசூர் ஜூவல்லரி டிவிஷன் பிரிவு தலைமை உற்பத்தி அலுவலர் திரு. சஞ்சய் ரனவாடே தலைமை விருந்தினராகப் பங்கேற்று பரிசுகளை வழங்கினார்.

நோய்த்தொற்று முன்வைத்த சவால்களை எதிர்கொள்ளும் வகையில், டாடா க்ரூசிபிள் கார்பரேட் விநாடி – வினா 2020 போட்டி, முதன்முறையாக மெய்நிகர் முறையில் ஆன்லைன் பதிப்பாக நடத்தப்பட்டது.

இந்த விநாடி – வினா போட்டிக்கான முதனிலைத் தேர்வு ஆன்லைன் மூலம் இரண்டு நிலைகளாக நடத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் 24 க்ளஸ்டர்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு க்ளஸ்டரிலும் முதல் 12 இடங்களைப் பெற்ற வெற்றியாளர்கள் வைல்டு கார்டு இறுதிப்போட்டிக்கான அழைப்பைப் பெறுவார்கள். முதல் 6 இடங்களைப் பெற்றவர்கள், ஆன்லைனில் நடத்தப்படும் க்ளஸ்டர் இறுதிப்போட்டியில் போட்டியிடுவார்கள். ஒவ்வொரு மண்டலத்திலும் 6 க்ளஸ்டர்கள் வீதம், இந்த 24 க்ளஸ்டர்களும் தெற்கு, கிழக்கு, மேற்கு, வடக்கு என 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு க்ளஸ்டர் இறுதிப்போட்டியின் வெற்றியாளரும் மண்டல அளவிலான இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவர். 4 மண்டல இறுதிப்போட்டிகளிலும் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான இறுதிப்போட்டியில் பங்கேற்பார்கள். நான்கு மண்டலங்களிலும் நடத்தப்படும் இறுதிப்போட்டியில் இரண்டாமிடம் பெறுபவர்கள் வைல்டு கார்டு இறுதிப்போட்டியில் பங்கேற்று, அந்த 4 பேரில் முதல் 2 இடங்களைப் பெறுபவர்கள் தேசிய அளவிலான இறுதிப்போட்டியில் பங்குபெறும் தகுதியை அடைவார்கள். மொத்தமாக 6 போட்டியாளர்களுடன் நடத்தப்படும் தேசிய அளவிலான இறுதிப்போட்டியில் வெற்றி பெறுபவர் தேசிய சாதனையாளர் மகுடத்தை அடைவதுடன் ரூ.2.5 லட்சம் ரொக்கப்பரிசைப் பெற்று டாடா க்ரூசிபிள் ட்ராபியை வெல்வார்.

அனைத்து இறுதிப்போட்டிகளும் டாடா க்ரூசிபிள் ஃபேஸ்புக், ட்விட்டர், லிங்க்டு இன், யூடியூப் தளங்களில் தாமதமாக ஸ்டீரிமிங் செய்யப்படும்.

சிறப்பான, தனித்துவமான, நகைச்சுவை பாணியில் விநாடி – வினா போட்டிகளை நடத்துவதில் புகழ் பெற்ற விநாடி – வினாமாஸ்டர் பிக்ப்ரெய்ன் கிரி பாலசுப்பிரமணியம் இப்போட்டிகளை நடத்துகிறார்.

மேலும் படிக்க