• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டாடா ஏஐஏ லைஃப் இன்ஸ்சூரன்ஸ், தமிழகத்தில் 6 புதிய டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கிளைகளை திறக்கிறது!

November 30, 2021 தண்டோரா குழு

இந்தியாவின் முன்னணி காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான டாடா ஏஐஏ லைஃப் இன்ஸ்சூரன்ஸ் தனது சேவைகளை விரிவாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் புதிதாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட 6 கிளைகளை திறக்கிறது.

இந்த விரிவாக்கத்தின் மூலமாக, காப்பீட்டு நிறுவனம் குறிப்பாக 6 முக்கிய நகரங்களான ஓசூர், காஞ்சிபுரம், அடையார், கோவை ஆர்எஸ் புரம், பூந்தமல்லி மற்றும் திருப்பூர் ஆகிய இடங்களில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இந்த காப்பீட்டு நிறுவனம் தற்போது 25 மாநிலங்களில் 218-க்கும் அதிகமான கிளைகளை கொண்டுள்ளது. அதே நேரத்தில் ஏஜென்சி, புரோக்கிங், பேங்காஸ்யூரன்ஸ், அசிஸ்டடு பர்சேஸ் மற்றும் ஆன்லைன் தளத்தில் மிகவும் வலுவான இடத்தை கொண்டுள்ளது.

இந்த விரிவாக்க நடவடிக்கையானது டாடா ஏஐஏ லைஃப் நிறுவனத்தின் வணிக வளர்ச்சி உத்திக்கான ஒரு பகுதியாகும். அதே போல வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் தமிழகத்தில் காப்பீட்டுத்துறையில் தொழில்துறையின் பங்களிப்பு ஆகியவற்றை அதிகரிக்கச் செய்வதற்கான பங்களிப்பையும் அளிக்கிறது. இந்த விரிவாக்கத்தின் மூலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு கிளையும் வாடிக்கையாளர்கள் நேரடியாக வர அவசியமில்லாத வகையிலான சேவைகள் மற்றும் காகிதமற்ற செயல்பாடுகளுடன் கூடிய டிஜிட்டல் தீர்வுகளையும் செயல்முறைகளையும் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் கிளை அலுவலர்களை வீடியோ அழைப்புகள் மூலமாகவோ அல்லது நேரடியாக கிளைகளுக்கு வருவதன் மூலமாகவோ அணுகினால், அவர்களின் தேவைகள் மற்றும் விசாரணைகளுக்கு உரிய நிவாரணங்களுக்குத் தேவையான, அவர்களுக்கு சுய சேவை டிஜிட்டல் கியோஸ்க் சேவையை பெற இயலும். இந்த கிளைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் சமூக இடைவெளிக்கான நெறிமுறைகளை பிறழாமல் கடைபிடிக்க உதவும்.

டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் தலைமை செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குநரான நவீன் தஹில்யானி கூறுகையில்,

“இன்றைய சவாலான காலகட்டங்களை கடந்து கொண்டிருக்கும் வேளையில், பாதுகாப்பு மற்றும் சேமிப்பு தொடர்பான தீர்வுகளை பெற வேண்டியதன் அவசியத்தை நுகர்வோர் அதிகம் உணர்ந்து வருகின்றனர். இந்த சூழ்நிலைக்கு மத்தியில், டாடா ஏஐஏ லைஃப் நிறுவனத்தில், நாங்கள் பல்வேறு நுகர்வோர் சேவை முறைகள் மூலமாக, குறிப்பாக தமிழகத்தில் மக்கள் எளிதில் சென்றடைகிற வகையிலான இடங்களில் அமைந்துள்ள கிளைகள் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்க முடியும் என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்.

இந்த கிளைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருப்பதால், புதிய யுகத்தின் வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளை பூர்த்தி செய்ய, அவை நம்மை அனுமதிக்கும். அதே நேரத்தில் ஆயுள் காப்பீட்டு துறையை இன்னும் வலுவாக்கி விரைவுபடுத்தும் அரசின் முயற்சிகளை ஆதரிக்கவும், மேலும் தொடரும் பெருந்தொற்றின் தொடர்பான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் செயல்முறைகளை பராமரிக்கவும் உதவும்” என்றார்.

டாடா ஏஐஏ லைஃப் இன்ஸ்சூரனஸ் நிறுவனத்தின் தலைமை முகமை அலுவலர், அமித் தவே கூறுகையில்,

”எங்களிடம் ஏஜென்சி விநியோகம் இல்லாத இடங்களில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கிளைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது எங்களது சேவைகளை விரிவாக்கம் செய்யவும் உள்ளூர் மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் சேமிப்புக்கான தீர்வுகளை வழங்குவதற்கும் உதவும். முக்கியமாக, தமிழகத்தில் ஆயுள் காப்பீட்டு ஏஜென்சியை தொழிலாக செய்ய விரும்புபவர்களுக்கு குறிப்பாக எண்ணற்ற வாய்ப்புகளை வழங்க இந்த நடவடிக்கை வழிவகுக்கும். நேரடியாக ஊதியம் பெறும் ஊழியர்களுடனும், மறைமுகமாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டதும், அதிக பயிற்சி பெற்ற லைஃப் இன்ஸ்சூரன்ஸ் ஆலோசகர்களுடனும் தொடர்புடையதாகும்” என்றார்.

தற்போதைய பெருந்தொற்று காலத்தில் அளிக்கப்பட்ட விழிப்புணர்வு மற்றும் காப்பீட்டின் முக்கியத்துவத்தை அதிகமாக மக்கள் உணர்ந்து கொண்டதால், பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் ஆயுளுக்கான விரிவான காப்பீட்டு தேவை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எதிர்கால நிதி தேவைகளை பாதுகாப்பதும் அவசர கால மருத்துவ செலவுகளை சமாளிக்க வேண்டியதன் அவசியம் காரணத்தால், காப்பீடு தொடர்பான நுகர்வோரின் கருத்து மற்றும் அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க