March 23, 2021
தண்டோரா குழு
டாடா மெடிக்கல் அண்ட் டயக்னாஸ்டிக்ஸ், சென்னை ஆண்டர்சன் டயக்னாஸ்டிக்ஸ் அண்டு லேப்ஸ், உடன் மருத்துவ ஆய்வக ஒருங்கிணைப்பு மேற்கொள்கிறது. இந்த செயல்பாட்டின் மூலம் புதிய தொற்றுவிகிதம் அதிகமாக பரவுவதைத் தடுக்கும் வகையில் அதனைக் கண்டறியும் தரமுறையை மேம்படுத்தியிருக்கிறது டாடாஎம்டி செக்.
டிஜிசிஏ-வினால் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கும் புதிய, ஐசிஎம்ஆர் வழிக்காட்டல்களுடன், பெலுடா சிஆர்ஐஎஸ்பிஆர் தளத்தை அடிப்படையாகக் கொண்ட, புதிய அதிநவீன கோவிட் கண்டறியும் தீர்வைப் பயன்படுத்தி 10,000-க்கும் மேற்பட்ட கோவிட் சோதனைகளை வெற்றிகரமாக மேற்கொண்ட ஏஎடிஎல் உடன் இணைந்து, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட டாடா டயக்னாஸ்டிக் கிட் பயன்பாட்டை விரைவாக அளவிட இந்த ஒருங்கிணைப்பு உதவுகிறது.
டாடாஎம்டி செக்-ன் புதிய சோதனை, தற்போது கோவிட் சோதனைக்காகப் பயன்படுத்தப்படும் ஆர்டி-பிசிஆருக்கான தெளிவான, விரைவான, உடனடியாக அணுகும்வகையிலான மாற்றாக இருக்கும். டாடாஎம்டியுடனான எங்களது மருத்துவ ஒருங்கிணைப்பு உதவும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஆண்டர்சன் டயக்னாஸ்டிக்ஸ் அண்ட் லேப்ஸ் இயக்குனர் டாக்டர் ஸ்ரீனிவாசராமன்.
எளிமை, உணர்திறன், தனித்தன்மை மற்றும் வேகமான முடிவுகளுடன் ஒரு உயர்தர சோதனை அனுபவத்தை வழங்குகிறது டாடாஎம்டி செக். மூலக்கூறு சோதனை தளங்களுடன் ஒப்பிடுகையில், டாடாஎம்டி செக்கில் மலிவான உபகரணங்களை பயன்படுத்தி மூன்று மணி நேரத்திற்குள் கோவிட் சோதனைகளை மேற்கொள்கிறோம். சிஆர்ஐஎஸ்பிஆர் தொழில்நுட்பத்தின் பயன்பாடானது மூலக்கூறு பரிசோதனையைப் பொறுத்தவரை ஒரு புதிய சகாப்தம் என்று தெரிவித்தார் சென்னை ஆண்டர்சன் கிளினிகல் ஜெனிட்டிக்ஸின் தலைவர் டாக்டர் சச்சின் ஹோங்குனிட்கர்.
தெர்மோசைக்கிளர்கள் போன்ற மலிவான ஆய்வக உபகரணங்களைப் பயன்படுத்தும் டாடாஎம்டி செக்கின் திறன், இரண்டாம் அடுக்கு மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்கள், கிராமங்களில் கோவிட் சோதனையைத் தொடங்க சிறிய ஆய்வகங்களுக்கும் பெருமளவில் ஊக்கம் தரும் என்று தெரிவித்தார் ஆண்டர்சன் டயக்னாஸ்டிக்ஸ் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி.
ஆண்டர்சன் டயக்னாஸ்டிக்ஸில் உள்ள அபாரமான குழுவுடன் சேர்ந்து பணியாற்றுவது, ஒரு புதிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட டாடாஎம்டி செக் தொலைதூரப் பகுதிகளிலும் கோவிட் சோதனை திறன் மற்றும் அணுகல் செயல்பாட்டை மேலும் வலுப்படுத்துவதால் நிகழும் தாக்கத்தை நிரூபிக்கும். நோய்த்தொற்றும் தொடரும் நிலையில் நோயறியும் தளத்தில் மேம்பாட்டை முன்னிறுத்துகிறது ஆண்டர்சன் டயாக்னாஸ்டிக்ஸ் உடனான டாடாவின் மருத்துவ ஒருங்கிணைப்பு என்று தெரிவித்தார் டாடா மெடிக்கல் அண்ட் டயாக்னாஸ்டிக்ஸ் நிர்வாக இயக்குனர் அண்டு தலைமை நிர்வாக அலுவலர் கிரிஷ் கிருஷ்ணமூர்த்தி.