• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாக்டர் வி ஜி மோகன் பிரசாத்திற்கு எ.சி.ஜியின் 2021 க்கான சமூக சேவை விருது

December 16, 2022 தண்டோரா குழு

கோவை சிங்காநல்லூர் சாலையில் உள்ள விஜிஎம் மருத்துவமனையின் தலைவர் வயிற்று மற்றும் கல்லீரல் நிபுணரான டாக்டர் வி ஜி மோகன் பிரசாத்திற்கு அமெரிக்கன் காலேஜ் ஆப் காஸ்ட்ரோஎன்டேரோலஜி இயக்கத்தின் 2021 க்கான சமூக சேவை விருது வழங்கப்பட்டது.

இந்த விருது சமூக சேவையில் உலகத்திலேயே சிறந்து விளங்கும் மருத்துவருக்கு ஆண்டிற்கொருமுறை வழங்கப்படுகிறது. உலகளாவிய எ சி ஜி என்னும் இந்த இயக்கத்தில் 11,000 க்கும் மேற்பட்ட வயிற்று நிபுணர்கள் உள்ளன.இந்நிலையில்,எ.சி.ஜியின் ஆளுநர் டாக்டர் பிரசாத் ஐயர் இந்த விருதை டாக்டர் வி ஜி மோகன் பிரசாத்திற்கு இன்று வழங்கினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் வி ஜி மோகன் பிரசாத்,

இந்தியாவில் இரண்டாவது முறையாக இந்த விருது எனக்கு கிடைத்துள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.இது இந்தியாவிற்கும் பெரிய பெருமை. உடல் பருமன் குறித்த தேசிய மாநாடு வரும் ஞாயிற்றுக்கிழமை கோவையில் நடைபெற உள்ளது. இதில் 12 நாடுகளை சேர்ந்த மருத்துவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இம்மாநாட்டில் உணவுபாதை எதுகளிப்பு நோயை சமாளிக்க அறுவை சிகிச்சை இல்லாமல் தெரபியூடிக் என்டோஸ்கோபி மூலம் சிகிச்சை அளிப்பவை குறித்து நேரடி ஸ்ட்ரீமிங் மூலம் சர்வதேச மற்றும் தேசிய ஆசிரியர்களால் நிரூபிக்கப்படும் என்றார்.

மேலும் படிக்க