• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டாக்டர்.மோகன்ஸ் நீரிழிவு மையம் சார்பில் சர்வதேச நீரிழிவு நிகழ்நிலை மாநாடு

July 30, 2021 தண்டோரா குழு

டாக்டர்.மோகன்ஸ் நீரிழிவு மையம் சார்பில் சர்வதேச நீரிழிவு நிகழ்நிலை மாநாடு 2021 சென்னையில் ஜுலை 30 முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது.

டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு மையம் சார்பில் சர்வதேச நீரிழிவு நிகழ்நிலை மாநாட்டின் 8-வது பதிப்பை டாக்டர்.மோகன்ஸ் நீரிழிவு சிகிச்சை நிறுவனங்கள் குழுமத்தின் ஒரு அங்கமான டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு கல்வி அகாடமி ஏற்பாடு செய்து நடத்துகிறது. 2021 ஜுலை 30 லிருந்து ஆகஸ்ட் 1 வரை, இந்த நிகழ்வு சென்னையில் மெய்நிகர் முறையில் இது நடைபெறுகிறது.

இந்த ஆண்டு நிகழ்வில் பங்கேற்கும் சர்வதேச குழுவில்,உலகெங்கிலுமிருந்து நீரிழிவு மீதான முக்கிய சிந்தனைத் தலைவர்கள், நீரழிவு சிகிச்சையில் சிறப்பு நிபுணர்கள் மற்றும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.இதற்கும் கூடுதலாக, இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் கௌரவம் மிக்க உயர்கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகளின் பிரதிநிதிகள், தேசிய அளவிலான குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

டாக்டர்.மோகன்ஸ் சர்வதேச நீரிழிவு நிகழ்நிலை 2021 என்பதன் 8-வது பதிப்பின் தொடக்க விழா ஜுலை 30 வெள்ளிக்கிழமையன்று மாலை 4.00 மணிக்கு நடைபெற்றது.பாண்டிச்சேரி மருத்துவ அறிவியல் மையத்தின் மருத்துவம் மற்றும் உட்சுரப்பியியல் துறையின் சிறப்பு ஆலோசகர் டாக்டர். அசோக் குமார் தாஸ், அமெரிக்கன் காலேஜ் ஆஃப் பிசிஸியன்ஸ் (ACP) -ன் இந்திய பிரிவின் ஆளுனர் டாக்டர். ஏ. முருகநாதன், இந்தியன் அகாடமி ஆஃப் டயாபட்டீஸ் – ன் தலைவர் டாக்டர். ஷஷாந்க் ஜோஷி, டயாபட்டீஸ் இந்தியான் தலைவர் டாக்டர். எஸ்.ஆர். அரவிந்த், இந்தியாவின் நீரிழிவு மீது ஆய்வுக்கான ஆராய்ச்சி சங்கத்தின் (RSSDI) தலைவர் டாக்டர். பன்ஷி ஷாபூ ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக இம்மாநாட்டு நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

டெலிஹெல்த் டயாபட்டிக்ஸ் ஆன்லைன் கோர்ஸ்ன் தொடக்க அறிமுக நிகழ்வில் டெலி மெடிசின் சொசைட்டி ஆஃப் இந்தியா (TSI) தமிழ்நாடு கிளையின் தலைவர் டாக்டர். சுனில் ஷ்ராஃப், TSI-ன் தலைவர் கர்னல் டாக்டர். அஷ்வினி கோயல் மற்றும் திருவனந்தபுரத்திலுள்ள ஜோதிதேவ்ஸ் டயாபட்டிக்ஸ் ரிசர்ச் சென்டரின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர். ஜோதிதேவ் கேசவதேவ் ஆகியோர் பங்கேற்கவிருக்கின்றனர்.

டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு குழும நிறுவனங்களின் தலைவரும் மற்றும் நீரிழிவு நிகழ்நிலை மாநாட்டின் அறிவியல் குழு உறுப்பினருமான டாக்டர் வி.மோகன் பேசுகையில்,

மெய்நிகர் முறையில் மூன்று நாட்கள் கால அளவில் நடத்தப்படுகின்ற டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு நிகழ்நிலை நிகழ்வின் 8-வது பதிப்பு, நீரிழிவுத் துறையில் அதிவேகமாக உருவாகி வரும் புதிய, சமீபத்திய முன்னேற்றங்களை எடுத்துரைக்கவும்,விவாதித்து உள்நோக்குகளைப் பகிர்ந்துகொள்ளவும், நீரிழிவு சிறப்பு மருத்துவர்கள்,அறிவியலாளர்கள், சுகாதார பராமரிப்பாளர்கள் ஆகியோருக்கு உலகத் தரத்திலான ஒரு தளத்தை வழங்குகின்ற, ஒரு தனிச்சிறப்பான கல்விசார் நிகழ்வாக இருக்கும். இந்த அப்டேட் நிகழ்வின் தொடக்க விழாவின்போது இந்திய டெலிமெடிசின் சங்கத்தின் ஒத்துழைப்போடு, டெலிஹெல்த் டயாபட்டிக்ஸ் ஆன்லைன் கோர்ஸ் என்பதனை புதிதாகத் தொடங்குகிறோம்.

பாதுகாப்பான மற்றும் நன்னெறி சார்ந்த டெலிமெடிசின் செயல்பாடு குறித்து ஒரு ஆழமான புரிதலை மருத்துவர்கள் கொண்டிருப்பதற்கு உதவவேண்டும் என்ற குறிக்கோளோடு,வடிவமைக்கப்பட்ட ஒரு தனித்துவமான கல்வித்திட்டமாக இது இருக்கும். இந்தியாவில் நகரங்களிலிருந்து தொலை தூரங்களில் அமைந்துள்ள பகுதிகளிலும் கூட நீரிழிவு சிகிச்சைப் பராமரிப்பிற்கு தொலைபேசி மூலம் வழங்கப்படும். ஆலோசனை சேவையை நோயாளிகள் பெற்று பயனடையுமாறு இது செய்யும்,என்று கூறினார்.

டாக்டர்.மோகன்ஸ் நீரிழிவு சிகிச்சை நிறுவனங்கள் குழுமத்தின் துணைத்தலைவரும், அறிவியல் குழுவின் உறுப்பினருமான டாக்டர். ரஞ்சித் உன்னிகிருஷ்ணன் இது தொடர்பாக மேலும் பேசுகையில்,

மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப்பணி ஆகியவற்றின் ஒரு நேர்த்தியான கலவை வழியாக, நீரிழிவு மற்றும் அதனோடு தொடர்புடைய சிக்கல்கள் மீது அறிவினை மேம்படுத்துவதற்கு இந்த நீரிழிவு நிகழ்நிலை நிகழ்வு பெரிதும் உதவும்.மூன்று நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வின்போது இடம்பெறுகின்ற பல்வேறு தலைப்புகளுள், நீரிழிவின் துல்லிய மருந்தளிப்பு,நீரிழிவில் புத்தம் புதிய சிகிச்சை முறைகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள், சமீபத்தில் வெளிவந்திருக்கும் இன்சுலின் பம்ப்புகள்,தொடர்ச்சியான,இரத்த குளுக்கோஸ் கண்காணிப்பு மற்றும் நீரிழின் சிக்கல்கள் வராமல் தடுப்பது மற்றும் மேலாண்மை ஆகியவை உள்ளடங்கும், என்று தெரிவித்தார்.

டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு நிறுவனங்கள் குழுமத்தின் நிர்வாக இயக்குனரும் மற்றும் இம்மாநாட்டு அறிவியல் குழுவின் உறுப்பினருமான டாக்டர். ஆர்.எம்.அஞ்சனா பேசும்போது,

தொடங்கப்பட்ட நாளிலிருந்தே, டாக்டர். மோகன்ஸ் சர்வதேச நீரிழிவு நிகழ்நிலை நிகழ்வானது, இந்தியாவில் நீரிழிவு மீது நடத்தப்படும் மிகப்பெரிய மாநாடுகளுள் ஒன்றாக ஒவ்வொரு ஆண்டும் தொடர் வளர்ச்சியைப் பெற்று வந்திருக்கிறது. இந்த ஆண்டு நிகழ்விற்கு 30,000-க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்க பதிவு செய்திருக்கின்றனர்.

இந்தியாவில் அனைத்துப் பகுதிகளிலிருந்து மட்டுமின்றி, யுஎஸ்ஏ, கனடா, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ், ஸ்காட்லாந்து, யுஏஇ, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகள் உட்பட, உலகின் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். இந்த அப்டேட் நிகழ்விற்கான எமது கல்விசார் பார்ட்னர்களாக. அமெரிக்கன் காலேஜ் ஆஃப் பிசிஷியன்ஸ் (ACP) இந்தியா கிளை, இன்டர்நேஷனல் டயாபட்டிக்ஸ் ஃபெடரேஷன் (IDF) தென்கிழக்கு ஆசியா, இந்தியன் அகாடமி ஆஃப் டயாபட்டிக்ஸ், டயாபட்டிக்ஸ் இந்தியா மற்றும் இந்தியன் காலேஜ் ஆஃப் பிசிஷியன்ஸ் ஆகிய அமைப்புகள் இணைந்திருக்கின்றன.

இந்த ஆண்டு நடைபெறும் இந்த மெய்நிகர் நிகழ்வு, சிறப்புரைகள், விளக்கவுரைகள், ஒரு கருப்பொருளைச் சார்ந்த கருத்தரங்குகள், நிபுணர்கள் குழு விவாதங்கள் ஆகியவற்றை உள்ளடக்கி ஒரு மிகச்சிறந்த அறிவியல் கல்வி செயல்திட்டத்தை வழங்குகிறது, என்று கூறினார்.

மெட்ராஸ் டயாபெட்டிக்ஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் தலைவரும் மற்றும் இந்நிகழ்வின் அமைப்பு செயலாளருமான டாக்டர். குஹா பிரதீபா கூறியதாவது:

இந்த ஆண்டு நிகழ்வுக்காக, நீரிழிவுத்துறையில் செயலாற்றி வருகின்ற 114 தேசிய அளவிலான வல்லுனர்களும் மற்றும் 13 சர்வதேச நிபுணர்களும், இதன் அறிவியல் கல்வித் திட்டத்திற்கு பங்களிப்பை வழங்கவிருக்கின்றனர். இந்த நிகழ்நிலை நிகழ்வின்போது மொத்தத்தில் 75 பிரசன்டேஷன்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்தியாவில் பெரும் சுமையாக இருக்கும் நீரிழிவை சமாளித்து, வெற்றி காண்பதற்கு மருத்துவர்கள் மற்றும் சுகாதார பராமரிப்பு பணியாளர்களின் திறன் மேம்பாட்டிற்கு இது உதவும். கூடுதலாக, நீரிழிவு மீதான ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைப் பராமரிப்பு தளத்தில் மருத்துவம் சார்ந்த அறிவு தற்போது நிகழ்ந்திருக்கும் முன்னேற்றங்களின் பயனுள்ள தகவல்களைப் பரிமாற்றம் செய்வதற்கான ஒரு வழிமுறையாகவும் இந்நிகழ்வு உதவும் என்றார்.

மேலும் படிக்க