September 16, 2025
தண்டோரா குழு
நமது மாணவர்களுக்கு உயர்தரமான கல்வி எளிதில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் துவக்கப்பட்ட டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் கீழ் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தற்போது கேம்பிரிட்ஜ் சர்வதேச பாடத்திட்டத்தை அளிக்கும் வேன்கார்டு அகாடமி என்ற பெயரில் ஒரு புதிய பள்ளி கட்டிடம் காளப்பட்டியில் துவங்கப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்த விழாவில்,டாக்டர் நல்லா ஜி பழனிசாமி – தலைவர் கேஎம்சிஹெச் & டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை,டாக்டர் தவமணி தேவி பழனிசாமி – துணைத் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர்,டாக்டர் என்.ஜி.பி. ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளை, டாக்டர் அருண் பழனிசாமி, செயல் இயக்குனர், கேஎம்சிஹெச் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கேம்பிரிட்ஜ் சர்வதேச பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு அளிக்கவுள்ள வேன்கார்டு அகாடமி, CAIE,CIPP,CLDP,IGCSR,AS மற்றும் A லெவல் முதலான பிரிவுகளில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும்.அறிவு, ஆற்றல் மற்றும் நற்பண்புகளுடன் மாணவர்களை வழிநடத்தி அவர்கள் வருங்கால தலைவர்களாகவும் புதுமை கண்டுபிடிப்புகள் சாதனையாளர் களாகவும் உருவாகிடத் தேவையான அனைத்து பயிற்சிகள் மற்றும் வசதிகள் செய்து தரப்படும்.
2025 – 26 கல்வியாண்டில் சிறுகுழந்தைகளுக்கான சேர்க்கை விரைவில் துவங்கும் எனவும் 2026 – 27 கல்வியாண்டில் 8-ம் வகுப்பு வரை சேர்க்கை நடைபெறும் எனவும் பள்ளி நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.