• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் வேலுமணி அம்மாள் நினைவாக நடைபெற்ற விளையாட்டு போட்டிகள்

June 29, 2019 தண்டோரா குழு

டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் வேலுமணி அம்மாள் நினைவாக கல்லூரி விளையாட்டு திடலில் கபாடி போட்டி, கைப்பந்து, கால்பந்து மற்றும் எறிபந்து போன்ற பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

மொத்தம் 16 பள்ளிகளில் 460 மாணவ மாணவியர்கள் விளையாட்டு போட்டியில் பங்கேற்றனர். மாணவியருக்கான கபாடி போட்டியில் புஜங்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளியும், மாணவர்களுக்கான கபாடிப் போட்டியில் சின்ன தடாகம் அரசு மேல்நிலைப் பள்ளியும் வெற்றி பெற்றது. மாணவியருக்கான எறிபந்து போட்டியில் கண்ணார்பாளையம் அரசு உயர் நிலைப் பள்ளி வெற்றி பெற்றது. கைப்பந்து போட்டியில் கோத்தகிரி கில்போர்டு மேல்நிலைப் பள்ளி மாணவியரும் கீழ் கோத்தகிரி அரசு மேல்நிலை பள்ளி மாணவரும் வெற்றி பெற்றனர்.

மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் காரமடை அரசு மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. விளையாட்டுப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் வி.திருப்பதி செய்திருந்தார்.

மேலும் படிக்க