June 9, 2021
தண்டோரா குழு
டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இன்றி மருந்து விற்கும் மெடிக்கல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், பொதுமக்கள் சாதாரண காய்ச்சல் அறிகுறி என மெடிக்கல்களில் மாத்திரை வாங்கி சாப்பிட கூடாது என்று ஆட்சியர் நாகராஜன் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் பெரும் தொற்று பரவலிலிருந்து பொது ம க்களை பாதுகாக்கும் வண்ணம் கோவை மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன.இதன்காரணமாக தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் கட்டுப்படுத்தப்பட்டு புதிய தொற்றால் பாதிப்போரின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் அறிகுறிகள் முதலில் சாதாரண வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளான சளி, இருமல் போன்று உள்ளதால், பொதுமக்கள் அதனை சாதாரண வைரஸ் காய்ச்சல் என எண்ணி பாராசிட்டமல் போன்ற மரு ந்துகளை டாக்டர்களின் பரிந்துரையின்றி வாங்கி சாப்பி டுகின்றனர். இதனால் அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு தாமதமாக அடையாளம் காணப்பட்டு அதன்மூலம் ஆபத்தான சூழ்நிலை ஏற்படுகின்றது.
எனவே பொதுமக்கள் காய்ச்சல் வந்தவுடன் சாதாரண காய்ச்சல் என புறக்கணிக்காமல் உடனடியாக டாக்டரை அணுகி, அவரின் பரிந்துரையின் பேரில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கு அசித்ரோமைசின்,ஐவர்மெக்டின், டாக்ஸிசைக்கிளின், பாரசிட்டமால், ஸ்டீராய்டு உள்ளிட்ட மருந்துகள், வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், ஆன்டிபயாடிக் மருந்துகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த மருந்துகள் விற்பனை செய்யும் பொழுது கண்டிப்பாக டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் வழங்கப்படும் சீட்டினை பெற்றுக் கொண்டு மட்டுமே மெடிக்கல்களில் விற்பனை செய்யப்பட வேண்டும்.
உயிர்காக்கும் ஸ்டீராய்டு மருந்துகள், வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், ஆன்டிபயாடிக் மருந்துகள் ஆகியவற்றின் இருப்புகளை சரியாக பராமரிக்க வேண்டும். டாக்டர்களின் பரிந்துரையின் பேரில் மேற்கண்ட மருந்துகளை நோயாளிகளுக்கு விற்பனை செய்தால் நோயாளியின் பெயர், முகவரி, கைப்பேசி எண் மற்றும் மருத்துவரின் தகவல்களையும் மருந்து கட்டுப்பாட்டு துறை மூலம் மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு டாக்டர்கள் தொலைபேசி அல்லது குறுஞ்செய்தி மூலம் பரிந்துரை செய்திருந்தால் அதற்குண்டான ஆதாரங்களை பெற்றுக்கொண்டு மருந்துகளை வழங்கலாம். எந்த நிலையிலும் மேற்கூறிய மரு ந்துகளை டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது மீறி விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.