கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, பெரியகடை வீதி உள்ளிட்ட இடங்களில் சுரங்கபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணி துவங்கியுள்ளது.
கோவை மாநகர் பகுதிகளான ஒப்பணக்கார வீதி, பெரியகடை வீதி, கிராஸ்கட் ரோடு, காந்திபுரம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் காரணமாக சாலையை கடக்க பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர். இதைத்தவிர்க்க, முக்கிய இடங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சுரங்க பாதைகள் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனிடையே, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் உள்ள குளங்கள் மற்றும் பல்வேறு பணிகள் ரூ.1500 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, பொதுமக்களின் வசதிக்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, பெரியகடை வீதி உள்ளிட்ட இடங்களில் சுரங்கபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, பெரியகடை வீதி உள்ளிட்ட இடங்களில் சுரங்கபாதை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
கோவை மாநகர் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளுடன், சுரங்கபாதையும் அமைக்கப்படும். இதனால் போக்குவரத்து நெருக்கடி பெருமளவு குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு