December 12, 2020
தண்டோரா குழு
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மிகவும் புகழ்பெற்ற ஜேகே டயர் எப்எம்எஸ்சிஐ 23வது தேசிய சாம்பியன்ஷிப் கார் பந்தயம் கோவை செட்டிபாளையம் காரி மோட்டர் ஸ்பீட்வேயில் நேற்று துவங்கியது.
இந்த சீசனின் துவக்க சுற்று அனைவருக்கும் மிகுந்த உற்சாகம் அளிப்பதாக இருந்தது. 2வது நாளான நேற்று நடைபெற்ற எப்எல்ஜிபி4 பந்தயத்தில் அஸ்வின் தத்தா மற்றும் நோவிஸ் கோப்பை போட்டியில் அமீர் சையது ஆகியோர் வெற்றி பெற்றனர்.கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த 16 வயது அமீர் சையது நோவிஸ் கோப்பைக்கான போட்டியில் அனைத்து சுற்றுகளிலும் தனது திறமையை திறம்பட வெளிப்படுத்தி வெற்றி பெற்றார். இந்த பந்தய பாதையில் அவர் முதல் முறையாக பங்கேற்றாலும் மிகவும் அற்புதமாக காரை ஓட்டி அனைவரையும் மயக்கினார்.
இந்த போட்டியில் பங்கேற்றவர்கள் மிகவும் சிரமப்பட்டபோதிலும், குறைந்த நேரத்தில் இந்த பாதையின் அனைத்து நுணுங்களையும் அவர் அறிந்து அவை அனைத்தையும் எளிமையாக கையாண்டார். நேற்று நடைபெற்ற போட்டியில் அவர் 2 பந்தயங்களில் வென்றது இன்று அவருக்கு மேலும் உத்வேகத்தை அளித்தது. இன்றும் அவர் 2 பந்தயங்களில் வெற்றி பெற்று பார்வையாளர்களிடம் பாராட்டையும் கைதட்டலையும் பெற்றார்.
பார்முலா எல்ஜிபி4 போட்டியில் டார்க் டான் ரேசிங்கை சேர்ந்த அஸ்வின் தத்தா வெற்றி பெற்றார். நேற்று நடைபெற்ற துவக்க பந்தயத்தில் எம்ஸ்போர்ட்ஸ் விஷ்ணு பிரசாத் குழு வெற்றி பெற்றது. ஆனால் இன்று நடைபெற்ற 2 பந்தயங்களிலும் அனுபவம் வாய்ந்த சென்னையைச் சேர்ந்த அஸ்வின் தத்தா அற்புதமாக காரை ஓட்டி போட்டிக்கு விறுவிறுப்பேற்றினார்.
இந்த போட்டியானது பல சமயங்களில் மிகவும் பதட்டமாக இருந்தது. ஆனால் அஸ்வின் எந்தவித பதட்டமும் இல்லாமல் காரை திறம்பட ஓட்டி அவரது குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு பந்தயத்தையும் வெற்றிகரமாக முடித்தார்.
இது குறித்து அஸ்வின் கூறுகையில்,
முதல் பந்தயத்தில் நான் மெதுவாக இருந்தேன், ஆனால் எனது வேகம் குறித்து எனக்கு போதுமான நம்பிக்கை இருந்தது. நான் பயன்படுத்தும் ‘சேப்டி கார்’ மூலம் இந்த வெற்றியை நான் பெற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்று தெரிவித்தார். எம்ஸ்போர்ட் நட்சத்திரங்கள் ராகுல் ரங்கசாமி மற்றும் விஷ்ணு பிரசாத் ஆகியோரை முந்திச் சென்று இந்த வெற்றியை அவர் பெற்றார்.
2வது பந்தயத்தின் துவக்கத்தில் ராகுல் முன்னேறிச் சென்றார் பந்தயத்தின் நடுப்பகுதியில் அவரைத் தொடர்ந்து வந்த விஷ்ணு வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேறினார். அதனைத் தொடர்ந்து விஷ்ணுவுக்கும், அஸ்வின் தத்தாவுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. அஸ்வின் தத்தா தனக்கான வாய்ப்பை திறம்பட பயன்படுத்தி விஷ்ணுவை முன்னேறிச் சென்று வெற்றி பெற்றார். விஷ்ணு கடைசி சுற்றில் கடுமையான முயற்சி மேற்கொண்டும் அஸ்வின் தத்தா வெற்றியைத் தட்டிச் சென்றார். இந்த போட்டியில் அஸ்வின் தத்தா முதலிடத்தையும் விஷ்ணு பிரசாத் இரண்டாவது இடத்தையும் சரோஷ் ஹடாரியா மூன்றாவது இடமும் பிடித்தனர்.
நேற்று முடிவுகள்:
ஜேகே டயர் நோவிஸ் கோப்பை :
பந்தயம் 1: 1. அமீர் சையது (எம்ஸ்போர்ட்) 15:56.927; 2. நெய்ம் ரிஸ்வி (எம்ஸ்போர்ட்); 3. துருவின் கஜ்ஜார் (டிடிஎஸ் ரேசிங்).
பந்தயம் 2: 1. அமீர் சையது (எம்ஸ்போர்ட்) 16:23.787; 2. துருவின் கஜ்ஜார் (டிடிஎஸ் ரேசிங்); 3. அமன் சவுத்ரி (டிடிஎஸ் ரேசிங்).
பந்தயம் 3: 1. அமீர் சையது (எம்ஸ்போர்ட்) 11:58.316; 2. அமன் சவுத்ரி (டிடிஎஸ் ரேசிங்); 3 . துருவின் கஜ்ஜார் (டிடிஎஸ் ரேசிங்).
பந்தயம் 4: 1. அமீர் சையது (எம்ஸ்போர்ட்)17:53.731; 2. அமன் சவுத்ரி (டிடிஎஸ் ரேசிங்); 3. துருவ் தியாகி (மொமண்டம் மோட்டார்ஸ்போர்ட்ஸ்).
ஜேகேஎன்ஆர்சி (எப்எல்ஜிபி4)
பந்தயம் 1: விஷ்ணு பிரசாத் (எம்ஸ்போர்ட்) 21:58.046); 2. சந்தீப் குமார் ஏ (டார்க் டான் ரேசிங்); 3. அஸ்வின் தத்தா (டார்க் டான் ரேசிங்).
பந்தயம் 2: அஸ்வின் தத்தா (டார்க் டான் ரேசிங்) 20:52.423; 2. ராகுல் ரங்கசாமி (எம்ஸ்போர்ட்); 3. விஷ்ணு பிரசாத் (எம்ஸ்போர்ட்).
பந்தயம் 3: 1. அஸ்வின் தத்தா (டார்க் டான் ரேசிங்) 22:13.962; 2. விஷ்ணு பிரசாத் (எம்ஸ்போர்ட்); 3. சரோஷ் ஹடாரியா (அஹுரா ரேசிங்).