• Download mobile app
01 Mar 2026, SundayEdition - 3672
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெ.,சொத்து குவிப்பு வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் டி.ஆர்.அந்தி அர்ஜுனா காலமானார்

March 28, 2017 தண்டோரா குழு

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தி.மு.க., கட்சி சார்பில் அஜாரான இந்தியாவின் மூத்த வழக்கறிஞர் டி.ஆர்.அந்தி அர்ஜுனா உடல் நலக்குறைவு காரணமாக செவ்வாய்க்கிழமை(மார்ச் 28) காலமானார்.

1933-ம் ஆண்டு பிறந்த இவர் மும்பை நகரில் தனது சட்டப் படிப்பை முடித்தார். தனது 38 வயதில் வழக்கறிஞர் பணியை தொடங்கினார். 1993-ம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை மகாராஷ்டிரா மாநிலத்தில் அட்வோகேட் ஜெனரல் ஆக பணியாற்றினார். அதன் பிறகு, 1996-ம் ஆண்டு முதல் 1998-ம் வரை இந்தியாவின் சொலிசிட்டராக பணியாற்றினார்.

பெரிய அரசியலமைப்பு வழக்குகளில் ஒன்றான கேசவனந்தா பாரதி வழக்கில் எச்.எம். சீர்வையுடன் ஆஜாரானார். அதேபோல் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தி.மு.க. கட்சி சார்பில் ஆஜாரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருடைய இறுதிச் சடங்கு இன்று மாலை நடைப்பெற்றது. பல்வேறு துறையை சார்ந்த பிரபலங்கள் அதில் பங்கேற்றனர்.

மேலும் படிக்க