• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெ.சி.டி பொறியியல் கல்லூரியின் நான்கு பொறியியல் பாடப் பிரிவுகளுக்கு தேசிய தரச்சான்று குழு அங்கீகாரம்

December 27, 2018 தண்டோரா குழு

கோவையில் உள்ள ஜெசிடி பொறியியல் கல்லூரியில் நான்கு பொறியியல் பாடப்பிரிவுகளுக்கு தேசிய தரச்சான்று குழுமத்தினால் ( NBA ) அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

கோவை அடுத்த சாவடி பகுதியில் ஜெ.சி.டி பொறியியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியின் நான்கு பொறியியல் பாடப்பிரிவுகள் தேசிய தரச்சான்று குழுமத்தினால் (NBA) அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இது குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இதில் பேசிய கல்லூரி முதல்வர் ரமேஷ் ,

எங்களது பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி அண்ணா பல்கலை கழகம் மற்றும் அகில இந்திய தொழில் நுட்பக் கழகத்தால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது. இதில் தற்போது பெட்ரோ கெமிக்கல் , இயந்திரவியல் , மின்னியல் மற்றும் மின் அணுவியல் , மற்றும் கணிப் பொறியியல் துறைகள் தேசிய தர மதிப்பீடு பெற்றதன் காரணமாக மாணவர்கள் சிறந்த கல்வி பெறுவதோடு, வெளிநாடுகளில் சென்று மேற்படிப்புகளை படிக்க ஏதுவாக இருக்கும் என தெரிவித்தனர். மேலும் பொறியியல் துறையில் ஒன்பது இளங்கலை மற்றும் நான்கு முதுகலை பாடப்பிரிவுகள் உள்ளதாகவும், இந்நிலையில் பெட்ரோ கெமிக்கல் துறை இந்தியாவிலேயே மூன்றாவதும் தென் இந்தியாவில் முதலாகவும் இந்த அங்கீகாரத்தை பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கடந்த அக்டோபர் 12 முதல் 14 வரை தேசிய தரச்சான்று துறையின் நிபுணர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்து நான்கு துறைகளுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த சந்திப்பின் போது அந்த துறைகளின் தலைமை முனைவர்கள் பெருமாள், கோஸ் தீஸ்வரன், ராஜீவ் குமார், கீதா உட்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க