• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெர்மன் தொழில்நுட்பத்தில் 1 லட்சம் லிட்டர் மழைநீர் சேகரிக்கும் தொட்டி அமைப்பு

January 2, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதி ரேஸ் கோர்ஸ் பகுதியில் சுமார் ரூ.42 கோடி மதிப்பில் நடைபாதையை அழகுப்படுத்துதல் மற்றும் சீரமைப்பு, அலங்கார விளக்குகள், சாலை வசதி, மழைநீரை சுத்திகரிப்பு செய்து நிலத்திற்கு அடியில் அனுப்புதல், தாமஸ் பார்க் வளைவில் மிடியா மரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மழைநீரை சாலையில் விணாக்காமல் சுத்திகரிப்பு செய்து நிலத்திற்குள் அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதற்காக ரேஸ் கோர்ஸ் பகுதியில் 25 இடங்களில் மழைநீரை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் இருந்து சுமார் 1 கி.மீ தூரம் வரை மழைநீர் குழாய் வழியாக வந்து திருச்சி சாலை ஸ்டேன்ஸ் சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டியில் விழும். இந்த தொட்டியில் 1 லட்சம் லிட்டர் மழைநீர் சேகரிக்க முடியும். இந்த மழைநீர் நிலத்திற்கு அடியில் செல்லும். ஜெர்மன் தொழில்நுட்பத்தில் இந்த பணிகள் மட்டும் சுமார் ரூ.2 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறுகையில்,

‘‘ மழைநீரை விணாக்கமல் அதனை சேகரித்து மீண்டும் நிலத்திற்குள் அனுப்ப ஜெர்மன் தொழில்நுட்பம் மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1 லட்சம் லிட்டர் மழைநீரை சேகரிக்கும் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியின் மேல் பசுமை புல்வெளிகள் கொண்ட தீவுத்திடல் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் மழை காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்காது.

மேலும் படிக்க