• Download mobile app
26 Feb 2026, ThursdayEdition - 3669
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெயலலிதா மரணம்- 4 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவு

January 9, 2017 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வழக்கில் 4 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அவரது உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறது என அவ்வபோது மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வந்தது.

மேலும், அவர் விரும்பும் போது வீட்டிற்குச் செல்லலாம் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் சொல்லப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் 5ம் தேதி இரவு 11:30 மணிக்கு ஜெயலலிதா மரணமடைந்தார் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதைத் தொடந்து “அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது” என சென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகர் ஜோசப் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன், வி. பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு “ ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் வழக்கை பிப்ரவரி மாதம்
23-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் படிக்க