January 2, 2018
தண்டோரா குழு
ஜெயலலிதா மரணம் தொடர்பாக டிடிவி தினகரன் சார்பில் விசாரணை ஆணையத்தில் பென் டிரைவ் சமர்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.இதனிடையே டிடிவி தினகரன், கிருஷ்ணபிரியா, ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் ஆகியோருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. இதில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவர்களிடம் இருக்கக்கூடிய ஆதாரங்களை 7 நாட்களுக்குள் ஒப்படைக்கவேண்டும் என உத்தரவிடப்பட்திருந்தது.
இந்நிலையில்,டிடிவி தினகரன் சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் விசாரணை ஆணையத்தில் பென்டிரைவை சமர்பித்துள்ளார்.இந்த பென்டிரைவில் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான தகவல்கள் இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.