• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி நியமனம்

September 25, 2017 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை கமிஷனின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதன் பின் அவர் 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஜெயலலிதா நன்றாக உள்ளார், விரைவில் வீடு திரும்புவார் என கூறப்பட்டு வந்த நிலையில் டிசம்பர் 5-ம் அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

இதனிடையே அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் குற்றசாட்டு கூறினர். இந்நிலையில் அணிகளும் இணைந்த போது ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்த விசாரணை கமிஷனின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமியை நியமித்து தமிழக அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் படிக்க