• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெயலலிதா தந்த கார்: நாஞ்சில் சம்பத் திருப்பி ஒப்படைப்பு

January 3, 2017 தண்டோரா குழு

ஜெயலலிதா தனக்கு வழங்கிய இனோவா காரை அக்கட்சியின் கொள்கைப் பரப்பு துணைச் செயலராக இருந்த நாஞ்சில் சம்பத் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 3) கட்சிக்கே திருப்பி ஒப்படைத்தார்.

ம.தி.மு.க. கொள்கை பரப்புச் செயாலாளராக இருந்தவர் நாஞ்சில் சம்பத். அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 2012 ஆம் ஆண்டு ம.தி.மு.க வி-லிருந்து விலகி அ.தி.மு.க. வில் இணைந்தார்.

கட்சியில் இணைந்த அவருக்கு கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் பொறுப்பை வழங்கினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அப்போது அவரது பிரசார பயணத்துக்காக இனோவா காரைப் பரிசாக வழங்கினார். இந்த காரில் நாஞ்சில் சம்பத் அ.தி.மு.க. பிரசார கூட்டங்களுக்குச் சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

“கடந்த 8 மாத காலமாக பிரசாரம் எதுவும் இல்லை. அதனால், கார் பயன்படுத்தப்படாமல் நின்று கொண்டு இருந்தது. இதனால் அந்த காரை இன்று நண்பர் மூலம் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஒப்படைத்து விட்டேன். இந்தக் காரைப் பரப்புரைக்கு மட்டுமே பயன்படுத்தி வந்தேன். சொந்தப் பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தியதில்லை” என்று தெரிவித்தார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா பொறுப்பேற்றதற்கு அவர் அதிருப்தி வெளியிட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

மேலும் படிக்க