March 15, 2018
தண்டோரா குழு
வேதா இல்லத்தை ஜெயலலிதா நினைவிடமாக மாற்ற 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் ஜெயலலிதா நினைவிடமாக மாற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதற்காக பல்வேறு அரசுத் துறையினர் வேதா இல்லத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், 2018–19ம் ஆண்டிற்காக தமிழக பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்று சட்டபேரவையில் தாக்கல் செய்தார். அதில், ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதைபோல், ஆளுநர் உரையில் ஏற்கெனவே அறிவித்தபடி மெரீனா கடற்கரையில் 80 கோடி ரூபாய் செலவில் ஜெயலலிதா நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.