• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜெயலலிதா இட்லி சாப்பிடவில்லை; பழரசம் மட்டுமே அருந்தினார் – அப்பல்லோ நிர்வாகம்!

March 5, 2019 தண்டோரா குழு

ஜெயலலிதா சிகிச்சையின் போது ஜெயலலிதா பழரசம் மட்டுமே அருந்தினார் என அப்பல்லோ மருத்துவமனை சார்பாக உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் எழுந்ததால் அவரின் மரணம் தொடா்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது.ம் இதனை தொடந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கிய அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சிகிச்சைக்கான செலவின விவரங்களை கடந்தாண்டு வெளியிட்டது. அதில், அவர் அப்போலோ மருத்துவனையில் இருந்த போது அவருக்கு வழங்கப்பட்ட உணவு மட்டும் பானங்களுக்கான தொகையாக ரூ. 1 கோடியே 15 லட்சம் என ரசீது வழங்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா சிகிச்சையின் போது பழரசம் மட்டுமே அருந்தினார் என்றும் அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், உதவியாளர்கள், மற்றும் போலீசார் என பலருக்கும் உணவு வழங்கியதால் தான் கட்டணம் ரூ.1.15 கோடி ஆனது என உயர்நீதிமன்றத்தில் அப்போலோ தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க