June 27, 2018
தண்டோரா குழு
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மதுரை ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் சீனிவாசன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் ராஜா சீனிவாசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார்.அந்த மனுவில்,கடந்த 19ம் தேதி வேடசந்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்ய கோரி காவல்துறையினரிடம் மனு அளித்ததாகவும்,ஆனால்,எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டிருக்கிறது.எனவே, திண்டுக்கல் சீனிவாசன் மீது வழக்குபதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருக்கிறது.இம்மனு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விரைவில் விசாரணைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.