March 8, 2018
தண்டோரா குழு
ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்பட்டதாக வெளியான தகவல் உண்மை அல்ல என அவரது கார் ஓட்டுநர் ஐயப்பன் கூறியுள்ளார்.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா கார் ஓட்டுநர் ஐயப்பன் இன்று காலை ஆஜரானார். விசாரணைக்கு பிறகு கார் ஓட்டுநர் ஐயப்பன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது பேசிய அவர்,
ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சரியில்லை என எனக்கு தகவல் வந்தது. உடனடியாக ஜெயலலிதாவுக்கு தேவையான பொருட்களை எடுத்து கொண்டு போயஸ் கார்டன் சென்றேன். முதலில் மருத்துவமனைக்கு செல்ல ஜெயலலிதா மறுத்ததாக தகவல் கிடைத்தது. மயங்கிய பிறகே ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சேர்க்கப்பட்ட மறுநாள் சுயநினைவேடு தான் இருந்தார். ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்பட்டதாக வெளியான தகவல் உண்மை அல்ல. ஜெயலலிதா இறந்த பிறகு கால் கட்டை விரல்களை கட்டுவது உள்ளிட்ட இறுதிச்சடங்குகளை செய்தேன். நவ. 19ம் தேதி வார்டுக்கு மாற்றும் போதும் ஜெயலலிதாவை சந்தித்ததாகவும் ஜெயலலிதாவை சசிகலா நன்றாக கவனித்து கொண்டதாகவும் கார் ஓட்டுநர் ஐயப்பன் கூறினார்.
மேலும், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்நாளில் சிகிச்சை முடிந்து மருத்துவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்தேன். 75 நாளும் மருத்துவமனையில் தான் இருந்ததாகவும், ஆனால் 3 முறை தான் ஜெயலலிதாவை பார்த்ததாகவும் கார் ஓட்டுநர் ஐயப்பன் கூறினார்.