ஜெம் மருத்துவமனையில்ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு அறிமுகம்
மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார்.
கோவை ஜெம் மருத்துவமனையில் ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மையத்தை இஸ்ரோ முன்னாள் இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
ரோபோடிக் சிகிச்சை முறை மிகவும் வரவேற்கதக்கது. ரோபோடிக் கருவிகளை நாம் வெளியில் இருந்து வாங்கிறோம். இது போன்ற கருவிகள் நம் நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட வேண்டும். நம் நாடு கொரோனா காலகட்டத்தை மிகவும் சிறப்பாக கையாண்டது. ரோபோடிக் சிகிச்சை முறை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிக அளவில் சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும்.
குறிப்பாக, ரோபோடிக் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்தி மருத்துவமனையில் மருத்துவர்கள் இருந்தவாறே ரோபோடிக் கருவிகளை பல்வேறு இடங்களிலும் இயக்கி பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் ரோபோடிக் கருவிகளை காண்பதற்கும் அதன் தொழில்நுட்பம் குறித்து தெரிந்து கொள்வதற்கும் மருத்துவமனை நிர்வாகம் உதவ வேண்டும். அப்போது தான் மாணவர்கள் புதிதாக பல தொழில்நுட்பங்களை கண்டறிய உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில், ஜெம் மருத்துவமனை தலைவர் பழனிவேலு, மருத்துவமனை சிஇஓ, இணை இயக்குனர் பீரவின் குமார், ஐஎஸ்ஒ தலைவர் ராஜேந்திர டோபிராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு