• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜெம்‌ மருத்துவமனையில் கேர் போர் லைப் திட்டம் துவக்கம்

February 5, 2020

உலக புற்றுநோய்‌ தினத்தை முன்னிட்டு ஜெம்‌ மருத்துவமனையில் கேர் போர் லைப் (care for life – A Project for cancer care & Awareness) எனும்‌ திட்டத்தின் துவக்க விழா நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும்‌ பிப்ரவரி மாதம்‌ 4ம்‌ தேதி உலக புற்றுநோய்‌ தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த வருட புற்றுநோய்‌ தினத்தின்‌ முக்கிய நோக்கம்‌ (Theme) நான்‌ இருக்கிறேன்‌ மற்றும்‌ செய்வேன்‌. இதன்‌ நோக்கம்‌ பொது மக்களிடம்‌ புற்றுநோய்‌ பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்‌ இதனால்‌ உலக அளவில்‌ புற்றுநோயின்‌ தாக்கம்‌ குறைய வாய்ப்புள்ளது.இதனை முன்னிட்டு, லேப்ராஸ்கோபி அறுவை சிகிச்சையில்‌ முன்னோடியாக விளங்கும்‌ கோவை ஜெம்‌ மருத்துவமனையும்‌, 1985ம்‌ ஆண்டு முதல்‌ சமூக சேவையில்‌ ஈடுபட்டிருக்கும்‌ ரோட்டரி கிளப் கோவை மெட்ரோ போலீஸ்‌ இணைந்து – care for life – A Project for cancer care & Awareness எனும்‌ திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.

இத்திட்டத்தின்‌ மூலம்‌ புற்றுநோய்‌ பற்றிய விழிப்புணர்வு மற்றும்‌ கருத்தரங்குகளை நடத்தவுள்ளது. இத்திட்டத்தில்‌ ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ முகாம்‌, பரிசோதனை மற்றும்‌ ஆலோசனை வழங்க உள்ளது. மேலும்‌ புற்றுநோயினால்‌ பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு முற்றிலும்‌ இலவசமாக லேபராஸ்கோபி அறுவை சிகிச்சை இத்திட்டத்தின்‌ மூலம்‌ வழங்கப்படும்‌. புற்றுநோயினை ஆரம்பகட்ட நிலையில்‌ கண்டறிந்தால்‌ அதை முற்றிலும்‌ குணப்படுத்த வாய்ப்பு அதிகம்‌. இத்திட்டத்தின்‌ மூலம்‌ வயிறு சம்மந்தப்பட்ட புற்றுநோய்கள்‌ (உணவு குழாய்‌, இரைப்பை, கல்லீரல்‌, கணையம்‌, பித்தபை, பித்த குழாய்‌, பெருங்குடல்‌ மற்றும்‌ மலக்குடல்‌) காப்பை மற்றும்‌ சிறுநீரகம்‌ சம்மந்தப்பட்ட புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Care for life தொடக்கவிழாவில்‌ டாக்டா. பிரவீன்‌ ராஜ்‌, உடல்பருமன்‌ எடை குறைப்பு அறுவை சிகிச்சையின்‌ தலைமை மருத்துவர் அவர்கள்‌ இத்திட்டத்தின்‌ அம்சங்களை எடுத்துரைத்தார்‌.

ஜெம்‌ மருத்துவமனையின்‌ நிறுவனர் டாக்டர்.சி.பழனிவேலு வரவேற்புரையில்‌ ஜீரண மண்டல புற்றுநோயினை பற்றியும்‌, அதற்கான லேப்பராஸ்கோபி அறுவை சிகிச்சை பற்றியும்‌, அதனால்‌ ஏற்படும்‌ நன்மைகளை பற்றியும்‌ பொதுமக்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தார்‌. இவ்விழாவிற்கு கெளரவ விருந்தினராக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின்‌ முதல்வர் டாக்டர். B அசோகன்‌ கலந்து கொண்டனர்‌. இத்திட்டத்தை டாக்டர். சி. பழனிவேலு மற்றும்‌ ரோட்டோரியன்கள்‌ PR விட்டல்‌, முருகன்‌ மற்றும்‌ மயில்சாமி ஆகியோர்‌ துவக்கி வைத்தனர்.இவ்விழாவின்‌ தலைமை விருந்தினராக சங்கரா கண்‌ மருத்துவமனையின்‌ நிறுவனரான டாக்டர். R.V. ரமணி கலந்து கொண்டு சிறப்பித்தார்‌. மேலும்‌ இவ்விழாவில்‌ புற்றுநோயினால்‌ பாதிக்கப்பட்டு, அவற்றை / அதை சிகிச்சையால்‌ வென்ற நோயாளிகளை அங்கீகரிக்கும்‌ வகையில்‌ நினைவுப்பரிசுகள்‌ வழங்கி கௌரவிக்கப்பட்டனர்‌. மேலும்‌ பல புற்றுநோயினால்‌ பாதிக்கப்பட்ட நோயாளிகள்‌ தங்களது அனுபவங்களை பகர்ந்து கொண்டனர்.

மேலும் படிக்க