கோவை- ஷீரடி பயணத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு ஆன்மீக சுற்றுலாவிற்கு சவுத் ஸ்டார் ரயில் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக சவுத் ஸ்டார் நிறுவன தலைமை திட்ட அதிகாரி ரவி சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
உள் நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இந்திய ரயில்வே துறையின் புதிய திட்டத்தின் முன்னோட்டமாக தமிழகத்தில் சவுத் ஸ்டார் ரயில் என்னும் ரயில் நிறுவனம் கோயம்புத்தூர் முதல் ஷீரடி வரை முதல் யாத்திரை பயணத்தை முடித்துள்ளது.
அடுத்த திட்டமாக ஜூலை மாதம் தொடங்கி வரும் டிசம்பர் வரை பல்வேறு சுற்றுலாக்களை சவுத் ஸ்டார் ரயில் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.அதன்படி,சென்னையில் இருந்து ராமேஸ்வரம்,திருச்செந்தூர்,மேல்மருவத்தூர், சபரிமலை,திருப்பதிக்கு கோவையில் இருந்து ஷீரடி ஆன்மீக தலங்களுக்கும் சுற்றுலாதலங்களுக்கும் சவுத் ஸ்டார் ரயில் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது என்றார்.
சென்னை-ராமேஸ்வரத்திற்கு வரும் 27 ம் தேதியும்,ஆக .30 தேதியும், செப்டம்பர் 24 தேதியும் , சென்னை -திருச்செந்தூருக்கு வரும் 30ம் தேதியும் ,செப்டம்பர் 3 ம் தேதியும் , நவம்பர் 5 ம் தேதியும்,கோவை – ஷீர டிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதியும்,செப்டம்பர் 30 ம் தேதியும்,அக்டோபர் 25 ம் தேதியும் ,டிசம்பர் 27 ம் தேதியும் ,சென்னை சபரிமலைக்கு ஆகஸ்ட் 18ம் தேதியும் செல்ல உள்ளது.
மேலும் விவரங்களுக்கு
www.southstarrail . com என்ற இணையதளத்திலும் , 1800 210 2991 இலவச அழைப்பிற்கு தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு