• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் – PSGR கிருஷ்ணம்மாள் கல்லூரி மாணவிக்கு வெண்கல பதக்கம்

May 19, 2022 தண்டோரா குழு

ஜெர்மனியில் கடந்த மே 18ம் தேதியன்று நடைபெற்ற ISSF ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில், 25 M ஸ்டாண்டர்ட் பிஸ்டல் ஓபன் போட்டியில், PSGR கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவி நிவேதிதா V நாயர் – III BBA
வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஒரு வீராங்கனை இவர்தான். கத்தாரில் ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் பெரு தென் அமெரிக்காவில் உலக சாம்பியன்ஷிப்பைத் தொடர்ந்து,நிவேதிதா பெற்ற மூன்றாவது சர்வதேச பதக்கம் இதுவாகும்.

இதையடுத்து,கல்லூரித் தலைவர் முனைவர் நந்தினி ரங்கசாமி,கல்லூரி தாளாளர் முனைவர் யசோதா தேவி,கல்லூரி முதல்வர் முனைவர் நிர்மலா மற்றும் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் ஜெயசித்ரா ஆகியோர் நிவேதிதா மற்றும் அவரது பெற்றோர்களை பாராட்டினார்கள்.

நிவேதிதாவின் பயிற்றுனர் அவரது தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க