• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜீசஸ் ஒரு தமிழர் என்ற புத்தகத்தால் சர்ச்சை.

March 1, 2016

கிறிஸ்துவர்களின் கடவுளான இயேசு கிறிஸ்து பிறப்பால் தமிழர் எனவும் அவர் மரவேலை செய்துவந்த ஐயர் எனவும் கூறப்பட்டுள்ள புத்தகம் விரைவில் மராட்டி மொழியில் வெளியிடப்பட உள்ளதால் இந்தியாவில் ஒரு இறுக்கமான சூழல் உருவாகியுள்ளது.

சாவர்கர் நேசனல் மெமோரியல் என்ற அமைப்பு ஆர்.எஸ்.எஸ்ஸின் நிறுவனர்கள் எழுதிவைத்து கொள்கை கோட்பாடுகள் குறித்த ஆவணங்களைப் பாதுகாத்து வருகிறது. இந்த அமைப்பு வரும் 26ம் தேதி ச்ரைஸ்ட் பரீச்சை என்ற ஒரு நூலை மராட்டி மொழியில் வெளியிட உள்ளது.

அதில் இயேசு கிறிஸ்து தமிழகத்தைச் சேர்ந்தவர் அவரது இயற்பெயர் கேசவ் கிருஷ்ணா எனவும் அவர் அனைத்துத் தமிழ் இந்துக்களைப் போல கருப்பு நிறம் கொண்டு இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அவர் பிறப்பால் விஸ்வகர்மா பிராமணர் ஜாதியில் பிறந்தாலும் தச்சுத்தொழிலை செய்து வந்ததால் ஆசாரி வகுப்பைச் சேர்ந்தவராக கருதப்பட்டார் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அவருக்கு 12 வயதில் பூணூல் போடப்பட்டது எனவும் அவரது தந்தையின் பெயரான சேசப்பன் தான் பிற்காலத்தில் மருவி ஜோசப் ஆனது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு நில்லாமல் அரபு மற்றும் ஜெருசலேம் பகுதிகளில் தமிழின் ஆதிக்கம் இருந்ததால் அங்கிருந்து இங்கு வந்து தியானம் கற்றுக்கொள்ள வந்ததாகவும் வந்த இடத்தில் இமயமலையில் சென்று ஈசனை நோக்கி கடும் தவம் செய்ததால் அவருக்குச் சிவன் காட்சியளித்து முக்தியளித்தார் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்தத் தியான வலிமையாலேயே சிலுவையில் அறைந்த பிறகும் மூன்று நாட்கள் உயிரோடு இருந்து பின்னர் சீடர்கள் அவரைக் கண்டெடுத்து சித்த மருத்துவம் மூலம் குணமையச் செய்தார்கள் எனவும் பின்னர் அங்கிருந்து வந்த அவர் இமயமலையில் கடும் தவம் செய்து பின்னர் பூதஉடல் சமாதியானது எனவும் கூறப்பட்டுள்ளது.

தியானம் செய்த மூன்று ஆண்டுகள் அவரை அங்கு இருந்த சீடர்கள் ஈஷாநாத் எனவே அழைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் 70 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது. இது தற்போதுதான் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது எனவும் இது ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து வந்துள்ளதால் தற்போது பெரிய அளவில் சர்ச்சைகள் இருக்காது எனவும் சுதந்திர வீரர் சாவர்கர் தேசிய நினைவகத்தின் செயல்தலைவர் ரஞ்சித் சாவர்கர் தெரிவித்துள்ளார்.

இதனிடைய இது குறித்து கருத்து தெரிவித்த கிறிஸ்துவ மத தலைவர்கள், இது யூகத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட கதை எனவே இது கிறிஸ்துவர்கள் மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க