April 10, 2017
தண்டோரா குழு
கடந்த மார்ச் 31ம் தேதியுடன் ஜியோ வாடிக்கையாளர்களின் இலவச சேவை முடிந்தது. ஆனால் ஜியோ நிறுவனம் சம்மர் சப்ரைஸ் என்ற புதிய சலுகைகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு அளித்தது.இந்த சலுகைகளை பயன்படுத்தி பிரைம் வாடிக்கையாளர்கள் 303 ரூபாய் செலுத்தி மேலும் மூன்று மாதங்கள் இலவச சேவையை பெறலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், ட்ராய் ஜியோவின் இந்த சலுகைகளை உடனே சப்ரைஸ் பேக்கை கைவிடுமாறு கூறியது.
இதையடுத்து,கடந்த 6ம் தேதி 303 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 3 மாதம் இலவச அழைப்பு, நாள் ஒன்றுக்கு 1 ஜிபி இணைய வசதி கொண்ட அறிவிப்பை திரும்ப பெற்றது ஜியோ நிறுவனம். இதனால் ஜியோ வாடிக்கையாளர்கள் ,மிகவும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.இந்நிலையில், ஜியோ நிறுவனம் தனது அதிகார்பூர்வ இணையதள பக்கத்தில் விரைவில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பல புதிய சலுகைகளை கொடுக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.