March 16, 2018
தண்டோரா குழு
முகேஷ் அம்பானியின் ஜியோ4ஜி செல்போன் நெட்வொர்க் வருகைக்கு பின் இணையதள பயன்பாடு அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.
ஒரு நாளைக்கு ஒரு ஜிபி இணைய சேவை இலவச வாய்ஸ் கால் என பல்வேறு சலுகைகள் அளித்தால் பலரும் ஜியோ நெட்வொர்க்கிற்கு மாறினார். இதனால் பல தொலைதொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை இழந்தன.
இந்நிலையில், லண்டனில் நடைபெற்ற விருதுநிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அம்பானி, தனது மகள் இஷா யேல் பல்கலைக் கழக பாடங்களை முடிப்பதற்காக இணையசேவை மெதுவாக இருப்பதாக வருத்தப்பட்டதாகவும், அப்போது தனது மகனான ஆகாஷ் அம்பானி புதிய உலகில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருவதாக கூறியதாகவும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், செல்போன் நிறுவனங்களால் செயற்கையாக இணைய சேவைக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதை உணர்ந்ததால் அதற்கு மாற்றாக ஜியோ சேவையை கட்டமைத்ததாகவும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.