• Download mobile app
30 Aug 2025, SaturdayEdition - 3489
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜிம்னாஸ்டிக் பிரிவில் ஒலிம்பிக்கிற்குத் தகுதி பெற்ற முதல் இந்திய பெண்.

April 19, 2016 தண்டோரா குழு

வடகிழக்கு மாநிலமான திரிபுராவின் தலைநகர் அகர்தலாவைச் சேர்ந்தவர் தீபா கர்மாகர். ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான இவர் பிரேசிலில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் இதுவரை 11 ஆண்கள் மட்டுமே பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் தற்போது தான் முதன் முறையாக ஒரு பெண் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

யார் இந்தத் தீபா கர்மாகர்?

திரிபுரா மாநிலம் அகர்தலா தான் தீபா கர்மாகரின் சொந்த ஊர். தனது தந்தை மூலம் இளமைப் பருவத்தில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டை விளையாட ஆரம்பித்தார். அவரது தந்தை பளு தூக்கும் வீரர் என்பதாலும் அவரின் தூண்டுகோலாலும் ஜிம்னாஸ்டிக்கில் அதிக ஈடுபடு கொண்டு பி.எஸ்.நந்தி, கல்பனா தேப்நாத் ஆகியோரிடம் முறைப்படி ஜிம்னாஸ்டிக் பயிற்சியை பெற்றார்.

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்த ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் தகுதிச் சுற்று போட்டியில் 4வது இடம் பிடித்ததன் மூலம் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் விளையாடத் தகுதி பெற்றுள்ளார்.

22 வயது நிரம்பிய தீபா கர்மாகர், 52.698 புள்ளிகள் பெற்று தகுதிச் சுற்றில் தேர்ச்சி அடைந்தார். இதுமட்டுமின்றி இந்தியாவிலிருந்து இவ்விளையாட்டுக்குத் தகுதி பெற்றுள்ள முதல் பெண் என்ற வரலாற்றுச் சாதனையும் படைத்துள்ளார்.

மேலும், கடந்த ஆண்டு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தீபா. காமன்வெல்த் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் வெண்கலம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க