• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜிமிக்கி கம்மல் ஷெரிலுக்கு பின்  சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகும் மலையாள பெண் !

February 12, 2018 தண்டோரா குழு

சமூக வலைதளங்களின் தாக்கம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது. சிறு வீடியோவும் வைரலாகி ட்ரெண்ட் ஆகிவிடுகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு வெளிபாடிண்டே புஸ்தகம் (‘Velipadinte Pusthakam’) படத்தில் இடம்பெற்றிருந்த  ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு, கேரளாவைச் சேர்ந்த இந்தியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆடிய நடனம் டிரெண்டாகி 2017-ம் ஆண்டில் யூடியூப்பில் பெறும் வரவேற்பு பெற்றது. அதில் ஆடிய பெண்கள், குறிப்பாக, முதல் வரிசையில் ஆடிய இரு பெண்களுக்கு குறிப்பாக செரிலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வந்தன.

தற்போது ஜிமிக்கி கம்மல் ஷெரிலுக்கு பின் இணையத்தில் டிரெண்டாகி அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த பிரியா பிரஷாஷ் வாரியர்.  ’ஒரு அதார் லவ்’ என்ற படத்தில் இடபெற்றுள்ள மானிக்க மலராயா பூவி என்ற பாடலில் நடித்துள்ள பிரியா பிரஷாஷ் என்ற நடிகை அவரது குறும்புத்தனமான முகபாவனைகள் மூலம் இணையத்தில் டிரெண்டாகி இருக்கிறார்.

பள்ளி மாணவர்களின் காதலை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் நிறைய புதுமுகங்கள் அறிமுகமாகி உள்ளனர். இந்த பாடல் வைரல் ஆனதற்கு மிக முக்கிய காரணமே பிரியா பிரஷாஷ் வாரியர் தான். இந்தியா முழுவதும் நெட்டிசன்கள் பலர் அந்தப் பாடலில் இடப்பெற்றுள்ள அவரது முகபாவனனைகளை புகைப்படமாக பதிவிட்டு வருகின்றன. மேலும் இதுகுறித்து நகைச்சுவையான மீம்ஸ்களும் நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.

 

 

மேலும் படிக்க