• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜிஎஸ்டி அறிமுக விழாவில் காங்கிரஸ் புறக்கணிப்பு

June 29, 2017 தண்டோரா குழு

நாடாளுமன்றத்தின் மத்திய மண்டபத்தில் நடக்கும் ஜிஎஸ்டி அறிமுக விழாவில் பங்கேற்கப் போவதில்லை என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஜூலை 1 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படவுள்ளது.இதற்கான அறிமுக விழா நாளை நள்ளிரவு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.இந்த விழாவில், பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்பட அரசியல் தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க பாஜக அழைப்பு விடுத்திருந்தது.இந்நிலையில் ஜிஎஸ்டி அறிமுக விழாவில் காங்கிரஸ் கலந்துக் கொள்ளபோவதில்லை என அறிவித்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சத்யவ்ராட் சதுர்வேதி கூறுகையில்,

இன்று காலை கட்சித் தலைவர் சோனியா காந்தி,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கையும் மற்ற காங்கிரஸ் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பை அடுத்து, காங்கிரஸ் கட்சி ஜிஎஸ்டி அறிமுக விழாவை புறக்கணிப்பதாக முடிவு எடுத்துள்ளது.

ஏற்கனவே திரிணமூல் காங்கிரஸ் ஜிஎஸ்டி அறிமுக விழாவை புறக்கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க