• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜவுளி ஏற்றுமதி பங்களாதேஷ்க்கு அதிகரிக்க வாய்ப்பு

June 6, 2023 தண்டோரா குழு

சீனா, இந்தியா, வியட்நாம் நாடுகளில் இருந்து பெருமளவில் நூல் மற்றும் துணிகள் பங்களாதேஷ்க்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் இருந்து அதிக அளவிலான துணிகளை வாங்க பங்களாதேஷ் ஆர்வம் காட்டி வருகிறது.

பங்களாதேஷினர் பருத்தி மற்றும் செயற்கைப் பஞ்சினால் தயாரிக்கப்படும் துணி வகைகளை தொடர்ச்சியாக வாங்க ஆர்வம் காட்டி உள்ளனர்.

இதுகுறித்து ஜவுளித்துறையினர் கூறுகையில்,

‘‘தமிழகத்தில் உள்ள ஜவுளி ஆலைகள் சுற்றுச்சூழல் சார்ந்த அனைத்து சான்றிதழ்களையும், பெற்றிருப்பதால், துணிகளின் ஏற்றுமதியை பங்களாதேஷ்க்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பஞ்சு மற்றும் செயற்கை பஞ்சு கலந்த பிளண்டட் ரகங்களுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது. சீனாவில் உற்பத்தி செலவு அதிகரிப்பதினால், படிப்படியாக வாய்ப்புகள் பங்களாதேஷ்க்கு அதிகரிக்கும். தமிழகத்தின் துணி உற்பத்தி கட்டமைப்பு நவீனப்படுத்தப்பட்டு வருவதால், தரம் உயர்ந்த துணிகள் ரகங்கள் பங்களாதேஷின் ஏற்றுமதிக்கு உகந்ததாக உள்ளது” என்றனர்.

மேலும் படிக்க