June 14, 2018
தண்டோரா குழு
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பத்திரிக்கை ஆசிரியர் சுஜாத் புகாரி மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
‘ரைசிங் காஷ்மீர்’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புகாரி. இவர் இன்று தனது பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஸ்ரீநகரில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் இவரது காரை குறி வைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், குண்டடிபட்ட சுஜாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த துப்பாக்கி சூட்டில் அவரின் பாதுகாப்பு அதிகாரிக்கும் குண்டடி ஏற்பட்டது. இச்சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மூத்த பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.