• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை கிளை சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு ரமலான் கிட்

May 12, 2020 தண்டோரா குழு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரக்கிளை சார்பில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு ‘ரமளான் கிட்’ வழங்கப்பட்டது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகரக்கிளை சார்பில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு ‘ரமளான் கிட்’ மற்றும் கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று கரும்புக்கடையிலுள்ள ஜமாஅத் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.இதில், தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய ‘ரமளான் கிட்’ மற்றும் முகக்கவசம், கையுறை மற்றும் சானிடைசர் அடங்கிய கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு, கோவை மாநகரத் தலைவர் ஜனாப். P.S. உமர் பாரூக் தலைமை தாங்கினார். மாநகரச் செயலாளர் ஜனாப். M.S. சபீர் அலி, மக்கள் தொடர்புச் செயலாளர் M. அப்துல் ஹக்கீம், கிழக்கு மண்டலத் தலைவர் ஜனாப். அப்துல் ஜலீல், மத்திய மண்டலத் தலைவர் ஜனாப். அபுதாஹிர் மற்றும் நிறுவனங்களின் செயலாளர் ஜனாப். உம்மர் ஜாபர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வின் மூலம் சுமார் 90 துப்புரவுப் பணியாளர்கள் பயனடைந்தனர். நிகழ்வினை சமூக சேவைத்துறை செயலாளர் அப்துல் ஹக்கிம் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.

மேலும் படிக்க