• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜப்பானில் நிலநடுக்கம் 5.6 ரிக்டர் – சுனாமி எச்சரிக்கை இல்லை

February 28, 2017 தண்டோரா குழு

ஜப்பான் நாட்டின் ஃபுகுஷிமா அணு மையம் அமைந்துள்ள வடகிழக்கு ஜப்பானில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 28) நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. எனினும், சுனாமி எச்சரிக்கை பிறப்பிக்கப்படவில்லை.

இது குறித்து ஜப்பான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், “வடகிழக்கு ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணு மையத்திற்கு அருகில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோளில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. சுனாமி ஏற்படும் அளவிற்கு பயமில்லை” என்றார்கள்.

அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்ட அறிக்கையில், “பசிபிக் கடலில் இருந்து 34 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள நமி என்னும் இடத்தில் 42.3 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது” என்று தெரிவித்தது.

ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கூறுகையில், “டோக்யோ நகரில் இருந்த உயர்ந்த கட்டடங்கள் அசைந்தன. அதனால், இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை” என்று தெரிவித்தது.

“இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது காயமடைந்தவர்கள் குறித்து தகவல் தெரியவில்லை. உள்ளூர் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது” என்று ஜப்பான் பொது ஒலிபரப்பு நிறுவனம், என்எச்கே கூறியுள்ளது.

“மேலும், ஃபுகுஷிமா அணு மையத்தில் வழக்கத்துக்கு மாறான நிலை எதுவும் இல்லை” என்று அம்மையத்தின் மின் சக்தி இயக்குபவர் கூறினார்.

2௦11ம் ஆண்டு, மார்ச் 11ம் தேதி, கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வடகிழக்கு கடற்பகுதியில் சுனாமி ஏற்பட்டு, 18,500க்கும் மேலான பேர் உயிரிழந்தனர், பலர் காணாமல் போய்விட்டனர். ஃபுகுஷிமா அணு மையத்தின் 3 அணு உலைகள் பாதிக்கப்பட்டு கதிரியக்க அபாயம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

நவம்பர் மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 1 மீட்டர் (3 அடி) சுனாமியை உண்டாக்கியது. அணு மையத்தின் கடற்கரையில் விழுந்தது. ஆனால் அணு மையத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை.

பூமிக்கடியில் நான்கு டெக்டானிக் பலகைகள் சந்திக்கும் இடத்தில் ஜப்பான் நாடு அமைத்திருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் பல நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளது.

மேலும் படிக்க