April 24, 2018
தண்டோரா குழு
இந்தியாவில் தமிழ் மொழியை பேசும் மக்கள் அதிகளவில் இருந்தாலும்,சிங்கப்பூர் மற்றும் இலங்கை போன்ற மற்ற நாட்டிலும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,ஜப்பானில் தமிழர்கள் கணிசமாக வசிக்கும் பகுதிகளில் ஜப்பானிய எழுத்துக்களுடன் தமிழ் எழுத்துக்களும் இடம்பெற்றுள்ள அறிவிப்பு பலகைகள் தற்போது வைக்கப்பட்டுள்ளன.அந்த அறிவிப்பு பலகை புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில்,இது குறித்து நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.அதில்,”உலகம் போற்றும் எம் தாய்தமிழ்” என்று பெருமிதமாக பதிவிட்டுள்ள ஜீ.வி பிரகாஷ் குமார்,தமிழை தனது அறிவிப்பு பலகைகளில் ஏற்றுக்கொண்ட ஜப்பானிய நாட்டிற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.