December 21, 2021
தண்டோரா குழு
தமிழ்நாடு கள் இயக்கத்தின் தலைவர் நல்லுசாமி ஜனவரி 21ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் கள் இறக்கி சந்தை படுத்த முடிவெடுத்துள்ளதாகவும் இது குறித்து தமிழக எம்.எல்.ஏ க்கள் அனைவருக்கும் கடிதம் அனுப்ப கோவை மாவட்ட மத்திய தபால் நிலையத்திற்கு வந்திருந்தார்.
“கள் இறக்குவதும் பருகுவதும் இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்களுக்கு அளித்த உணவு தேடும் உரிமை என கூறிய அவர் ஜனவரி மாதம் 21ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி சந்தைபடுத்த வேண்டுமென தமிழ்நாடு கள் இயக்கம் முடிவெடுத்துள்ளதாக கூறினார்.
இது குறித்து அனைத்து எம்.எல்.ஏ க்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளதாக தெரிவித்த அவர் இந்த கோரிக்கை நியாயமானது என்றால் ஆதரவு அளியுங்கள்.இல்லையெனில் வாதிட வாருங்கள். இரண்டும் இல்லையெனில் உங்களுக்கு எதற்கு எம்.எல்.ஏ பதவி என கேள்வி எழுப்பினார். இதற்கு எம்.எல்.ஏ க்கள் பதிலளிக்கவில்லை என்றால் விமர்ச்சிக்க வேண்டி வருமென தெரிவித்தார்.