இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரௌண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ராஜ்கோட்டில் நேற்று திருமணம் நடைபெற்றது.
இந்திய அணியின் ஆல்ரௌண்டர் ரவீந்திர ஜடேஜாவிற்கும் அவரது பால்ய தோழியான ரிவா சோலங்கிக்கும் நேற்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் திருமணம் நடைபெற்றது.
திருமண ஊர்வலத்தில் மணப்பெண்ணுக்கு அருகில் திடீரென துப்பாக்கி குண்டுகள் முழங்கிய சத்தம் கேட்டது. அதனால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு உடனே வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் திருமண விழாவில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவை பார்த்தபோது, அதில் ஜடேஜாவின் உறவினர் ஒருவர் துப்பாகியால் சுட்டுள்ளது தெரியவந்தது.
இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதால் எச்சரிக்கை செய்து விடப்பட்டார். இது குறித்து காவல்துறையினர் கூறும்போது,
உரிமம் பெற்ற துப்பாக்கி என்றாலும், தற்காப்பு என்ற காரணத்தை தவிர மற்ற நேரங்களில் துப்பாக்கியை பயன்படுத்தக் கூடாது எனவும் அவ்வாறு பயன்படுத்தும் பொது பொதுமக்களுக்கு இடையூறு இருக்கும் பட்சத்தில் வழக்குப் பதிய முகாந்திரம் உள்ளது எனவும் தெரிவித்தனர்.
ஆனால் இந்தத் துப்பாக்கி சூட்டில் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை மேலும் யாரும் இதைப்பற்றி புகாரும் கொடுக்கவில்லை என்பதால் எச்சரிக்கை செய்து அனுப்பப்பட்டார் எனவும் தெரிவித்தனர்.
உரிமம் பெற்ற துப்பாக்கியாக இருந்தாலும், தற்காப்புக்காக மட்டுமே சுட வேண்டும் என்பது தான் சட்ட நடைமுறை. இந்த நடைமுறைகளை மீறும் போது 3 ஆண்டுகள் வரை தண்டனை அளிக்கச் சட்டத்தில் வழிவகை உள்ளதாகக் கூறப்படுகிறது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்