• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சோமசுந்தரம் ஆலை ரயில்வே பாலம் அருகில் கோழி கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மனு

February 21, 2023 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி கமிஷனர் பிரதாப் முன்னிலை வகித்தார்.

இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டூர் கிளை செயலாளர் சற்குணம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :

கோவை மாநகராட்சி 83வது வார்டுக்குட்பட்ட சோமசுந்தரம் ஆலை, காளீஸ்வரா ஆலை பாதையில் உள்ள ரயில்வே பாலம் அருகில் சிலர் கோழி கழிவுகளை கொட்டி சுகாதார சீர் கேடு ஏற்பட்டு வருகிறது. அதேபோல அந்த பகுதி முழுவதும் திறந்த வெளி கழிப்பறையாக உள்ளது.அந்த பாதை வழியாக நடக்க முடியாத
அளவு துர்நாற்றம் வீசுகிறது. எனவே உடனடியாக மாநகராட்சி நிர்வாகம்நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இப்பாதையில் இருபுறமும் கார் மற்றும் லாரிகளை விரிசையாக
நிறுத்தி வருவதால் போக்குவரத்து சிரமம் ஏற்படுகிறது.

சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த வார்டு பகுதியில் இரவு நேரத்தில் குடிநீர் கொடுப்பதால் இரவு நேரத்தில் கண்
விழித்திருந்து தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.10லிருந்து 12 நாட்கள் என்ற நிலையில், குறைந்த இடைவெளியில்
தண்ணீர் கொடுக்கவும் இரவு நேரத்தில் தண்ணீர் தருவதை மாற்றி பகல் நேரத்தில் தண்ணீர் கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் சொத்து வரி, குடிநீர் வரி, மின்விளக்கு, சாலை வசதி என பொது பிரச்சினைகள் தொடர்பாக 40க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை மக்கள் மேயரிடம் அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் உடனடியாக மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் உத்தரவிட்டார்.

மேலும் படிக்க