கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சமீரன் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் கிணத்துக்கிடவு பகுதி சோனியா காந்தி நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:கிணத்துக்கடவு தாலுகாவுக்கு உட்பட்ட வடபுதூர் கிராமம் சோனியா காந்தி நகரில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். வீட்டு வரி, குடிநீர் வரி, மின் இணைப்பு கட்டண வரி ஆகியவற்ற முறையாக செலுத்தி வருகிறோம்.
ஆனால் எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. சாலை வசதி, சாக்கடை வடிகால் வசதி போன்றவைகள் இல்லை. வீட்டுமனைகளில் இருந்து வருகின்ற கழிநீரை வெளியேற்ற முடியாமல் மழை காலங்களில் பெய்து வருகின்ற மழை நீர் சாக்கடை கழிவுடன் கலந்து தேங்குகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளாகிறது. உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் நேரடியாக எடுத்து சொல்லியும், ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியும், எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.ல் உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்