• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சொத்து வரியை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மனு

April 6, 2022 தண்டோரா குழு

தமிழக அரசு அறிவித்துள்ள அபரிமிதமான சொத்து வரியை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக கோவை மாநகராட்சி ஆணையரியிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் மாநகர, நகர, பகுதிகளில் சொத்து வரியை உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.பல்வேறு அரசியல் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் கோவை மாவட்ட புதிய தமிழகம் கட்சி சார்பாக தமிழக அரசு அறிவித்துள்ள மாநகர , நகர , பேரூராட்சிகளில் அபரிமிதமான சொத்து வரி உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி ,கோவை மாநகராட்சி ஆணையரிடம் மனு வழங்கப்பட்டது.

மாநகர் மாவட்ட தலைமை முகவர் சங்கர் குரு தலைமையில்,மாநில துணை பொதுச்செயலாளர் பொ.சுப்பிரமணி,வடக்கு தொகுதி பொறுப்பாளர் இல.சித்தார்த்தன்,கிணத்துக்கடவு தொகுதி பொறுப்பாளர் பிரேம்,இளைஞரணி கார்த்திக் மற்றும் பல நிர்வாகிகள் கலந்துகொண்டு வழங்கப்பட்ட மனுவில்,

கடந்த இரண்டு வருடங்களாக ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று உட்பட பல்வேறு காரணங்களால் பொருளாதாரம் முடங்கியுள்ள நிலையில், தற்போது மாநகராட்சி , நகராட்சி , பேரூராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் , வணிக வளாகங்கள் கல்வி நிறுவனங்கள் உள்ளி ட்டவைகள் மீதான சொத்து வரியை 100 முதல் 200 மடங்கு உயர்த்தி அரசாணை பிறப்பித்து’ மக்களின் மீது சுமையை கூட்டியுள்ளதாகவும், மேலும் சொத்து வரி அதிகப்படுதியதற்கு, மத்திய அரசினுடைய 15 – ம் நிதிக்குழு அறிக்கைதான் காரணம் என கூறுவதை, புதிய தமிழகம் கட்சி கண்டிப்பதாகவும்,மக்களை பெருந்துயருக்கு ஆளாக்கும் இந்த அறிவிப்பை உடனடியாக தமிழக திரும்பப் பெற வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசினுடைய 15 வது நிதிக் குழு எந்த ஆண்டு, எந்த மாதம், எந்தத் தேதியில் இந்த அறிக்கையை மாநில அரசுக்கு அனுப்பியது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளனர். மேலும் மத்திய நிதிக்குழு, நகர்ப்புற சொத்து வரியை உயர்த்த உத்தரவிட்டிருந்தால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக ஏன் அதை அமலுக்குக் கொண்டு வரவில்லை எனவும் கேள்வி எழுப்பிள்ளனர்.

மேலும் படிக்க