• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சொத்துவரியினை செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை !

September 30, 2023 தண்டோரா குழு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-24ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரியினை 31.10.2023 – க்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு சொத்துவரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

மேற்படி சொத்துவரி தொகையினை ரொக்கம்,கடன் மற்றும் பற்று அட்டை காசோலை மற்றும் வரைவோலை மூலமாக மாநகராட்சியின் அனைத்து வரி வசூல் மையங்களிலும்,மேலும் tnurbunepay.tn.gov.in என்ற நகராட்சி நிர்வாக இயக்குநரக இணையதள டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாகவும் செலுத்தலாம்.

எனவே , மாநகராட்சி பகுதிகளுக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் மேற்காணும் வசதியினை முழுமையாக பயன்படுத்தி , 2023-24ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான தங்களது சொத்துவரியினை அக்டோபர் 31 ம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் வரை ஊக்கத்தொகையினை பெற்று பயனடையுமாறு ( முழு கூடுதல் பொறுப்பு ) மரு.ச.செல்வசுரபி
தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க