• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சைபர் மோசடியில் ரூ.40.81 லட்சம் முடக்கப்பட்டுள்ளது : கோவை மாவட்ட எஸ்.பி பேட்டி

March 17, 2022 தண்டோரா குழு

சைபர் மோசடி தொடர்பான புகார்களின் பேரில் ரூ.40 லட்சத்து 81 ஆயிரத்து 113 முடக்கப்பட்டுள்ளதாகவும், பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் அவரது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

இந்த அலுவலகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் சைபர் கிரைம் காவல் நிலையம் துவங்கி செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நேஷனல் சைபர் க்ரைம் ரிப்போர்ட் போஸ்டல் மூலமாகவும் புகார் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பண மோசடி தொடர்பாக கடந்த 2021ம் ஆண்டில் 21 வழக்குகளும், 2022ஆம் ஆண்டு 13 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக இருவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடி தொடர்பான புகார்களின் பேரில் இதுவரை ரூ.18.57 லட்சம் கைப்பற்றப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.மேலும், ரூ.40லட்சத்து 81 ஆயிரத்து 113 முடக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக நடப்பு ஆண்டில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் அதில் மூன்று நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

பணமோசடி குற்றங்களை தடுக்க 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டால் உடனடியாக இந்த தொலைபேசி எண்ணில் புகார் அளித்தால் உடனடியாக இழந்த பணத்தை மீட்க முடியும். இணையதள குற்றங்கள் அதிகமாக தற்பொழுது நடைபெற்று வருகின்றது. பாதிக்கப்பட்டோர். வங்கியில் இருந்து பேசுவது போன்றும், கஸ்டமர் கேரில் இருந்து பேசுவது போன்றும் மோசடிகள் நடக்கிறது. கோவையில் புறநகர் பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று மட்டும் 74 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க