February 16, 2018
தண்டோரா குழு
முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் உடல்நிலை சரியாக இருந்தால் எனது கட்சியில் சேர்வேன் எனக் கூறியதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி சேஷனை சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நடிகர் கமல்ஹாசன் இன்று நேரில் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன்,
சேஷனிடம் நலம் விசாரித்தேன். உடல்நிலை சரியாக இருந்தால், எனது கட்சியில் சேர்வேன் எனக் கூறினார்.மேலும், அரசியல் ரீதியாக சந்தேகங்களுக்கு விளக்கம் பெற உங்களை சந்திக்கலாமா என கேட்டதாகவும் கமல் கூறினார்.
நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21-ம் தேதி முதல் தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ள நிலையில் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷனுடன் நடிகர் கமல்ஹாசன் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.