October 3, 2025
தண்டோரா குழு
ஆர்சிஎம், இந்தியாவின் முன்னணி நேரடி விற்பனை நிறுவனம், தனது 25ஆவது ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக “ரூபாந்தரண் யாத்திரை” ஈரோட்டில் அக்டோபர் 4ம் தேதி நடத்த உள்ளது.
இந்த யாத்திரை, உள்ளூர் சமுதாயங்களுக்கு புதிய வாழ்வாதார வாய்ப்புகளை ஏற்படுத்தும்,மற்றும் தங்களைச் சுயமாக நிலைத்துக் கொள்ள உதவும் விதத்தில் அமைந்துள்ளது. இது,பெண்கள் தொழில்முனைவோர்கள், இளைஞர் தலைவர்கள் மற்றும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள் ஆகியோரின் உண்மை வாழ்க்கை கதைகளை வெளிப்படுத்தும். 100 நாட்கள் நீளமான, 17,000 கி.மீ பயணமாகும் இந்த யாத்திரை, நாடு முழுவதும் 75 நகரங்களை சென்றடைந்து, 25 பெரிய விழாக்களை நடத்தவுள்ளது.
இது சுகாதாரம், சேவை மற்றும் பண்பாடு எனும் செய்திகளை பரப்பும்.ஆர்சிஎம் நிறுவனத்தின் நோக்கம் வெறும் விற்பனை அல்ல, அது மனிதர்களை மையமாகக் கொண்ட, மதிப்பீடுகளால் வழிநடத்தப்படும் ஒரு இயக்கமாக இருக்க வேண்டும் என்பதையே இந்த யாத்திரை வலியுறுத்துகிறது.ஈரோடு மக்களுக்கு இந்த நிகழ்ச்சி மூலம் தனித்துவமான வாய்ப்புகள் கிடைக்கும்.
பாரத் முழுவதும் இந்த இயக்கம் எவ்வாறு மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கிறது என்பதையும் நேரில் காணக்கூடிய வாய்ப்பு இதுதான்.2000ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆர்சிஎம், வீட்டு மகளிர், ஓய்வு பெற்றவர்கள், இளைஞர்கள் மற்றும் குடிபோதையில் இருந்து மீண்ட நபர்களையும் வலிமையாக்கி, அவர்கள் முழுமையான வெற்றியை அடைய உதவியுள்ளதே அதன் சிறப்பம்சமாகும். நிகழ்வின் தொடக்கமாககாலை 7 மணிக்கு – ஆர்சிஎம் ப்ரஞ்ஜீத்: ஆர்சிஎம் நிறுவனத்தின் முக்கிய கோட்பாடுகளை எடுத்துரைக்கும்.
யோகா அமர்வு: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சுகாதார புரட்சி மற்றும் திட்டங்கள் ஆர்சிஎம் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் சுகாதார முயற்சிகள் அறிமுகம்.சமூக சேவைகளில் பங்கேற்பு.ஆவணப்படம்: ஆர்சிஎம் நிறுவனத்தின் பயணத்தை காட்டும் ஆவணப்படம்.சிறந்த குடிமகன் உறுதி எடுத்தல்: சமூக பொறுப்பிற்கு உறுதியளித்தல்.அறிவு ஊட்டும் பேரணி: சேவை, சுகாதாரம், பண்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நகரமெங்கும் பரப்பும்.
முக்கிய அம்சமாக ஆர்சிஎம் நிறுவனர் திலோக் சந்த் சாப்ரா அவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட “மனசா வாசா கர்மணா – ஒரு கர்மயோகியின் ஜீவனி” என்ற புத்தகம் முக்கிய பங்காற்றும். அவர் எப்படி ஒரு கர்மயோகியாக வாழ்ந்தார் என்பதை இந்த நூல் எடுத்துரைக்கிறது. ஆர்சிஎம் நிர்வாகத்தின் மேனேஜிங் டைரக்டர் சௌரப் சாப்ரா கூறுகையில் “ரூபாந்தரண் யாத்திரை என்பது ஆர்சிஎம் நிறுவனத்தின் 25 ஆண்டுகள் நிறைவு செய்ததையும், நம்முடைய கூட்டாளர் வாங்குநர்களின் சுயநிலைபேறு சாதனைகளையும் கொண்டாடும் விழாவாகும்.” 2000இல் ஒரு துணி தயாரிப்புடன் தொடங்கிய ஆர்சிஎம், தற்போது ₹2,400 கோடி மதிப்புள்ள நிறுவனமாக மாறியுள்ளது.